பக்கம்:தனி வீடு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைரம் போலப் பாய்ந்திருக்கிறது. அவர்களைப் போன்ற வீரர்கள் யாரும் இல்லே. --

ஆரம் கண்டிகை ஆடையும் கங்தையே, பாரம் ஈசன் பணி அல தொன்றிலார். ஈர அன்பினர்: யாதும் குறைவிலார்; வீரம் என்னுல் விளம்பும் தகையதோ!'

தொண்டர் பெருமை

ஆண்டவனச் சார்ந்து அவனுடைய அருட் செல்வத் தைப் பெறுவது நல்லது என்று சொல்வதை விட்டு, தொண்டர் குழாத்தைச் சாருவதுதான் கதி என்று அருண கிரியார் சொல்கிருரே என்ற கேள்வி எழலாம். -

இறைவன் திருவருளே நேரே பெறுவது என்பது அரிய காரியம். அந்த அருளேப் பெறுவதற்கு எத்தனையோ தகுதி வேண்டும். செல்வத்தையும், செல்வம் படைத்தவர் களையும் கண்டு மயங்கி அவர்களைப் போல நாமும் இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு கணமும் கவலைப்பட்டு, முயற்சி பண்ணி, அது பலித்தால் மேலும் செல்வத்தை ஈட்ட வேண்டுமென்று கினைத்து, ஐயோ ஆசை கிறை வேறவில்லையே' என்று துன்புற்று வாழ்கிற வாழ்க்கை யைப் போன்ற அவலம் வேறு இல்ல்ை. இந்த அவல் வாழ்க்கையில் பற்றுக் கொண்டவர்களுக்குத் திடீரென்று இறைவன் சார்பு கிடைத்துவிடாது. ஆனல் தொண்டர் களுடைய குழாத்தில் சேர்ந்து கொண்டார்களானல் அவர்களுடைய சேர்க்கைச் சிறப்பால் தெளிவு பெறு வார்கள். மெல்ல மெல்லச் செல்வத்தின்பாலும், செல்வர் களின்பாலும் உள்ள பற்று நழுவிவிடும். இறைவன் திரு வருள் இன்பம் ஏறும். இறைவன் நமக்கு நேரே இன்பத் தைத் தருவதைக் காட்டிலும் தன் தொண்டர்கள் மூல மாகத் தருகிற இன்பம் பெரிது. காவேரி நீர் நேரே பாயாது; கால்வாய் மூலமாகவும், மடையின் மூலமாகவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/136&oldid=575947" இலிருந்து மீள்விக்கப்பட்டது