பக்கம்:தனி வீடு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை 1 27

பாய்ந்தால்தான் வயல்களுக்குப் பயன் உண்டே அன்றி நேரே பாய்ந்தால் தாங்குவதற்கு ஆற்றல் இல்லை. அப்படி, தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படியாகச் செய் கிறவர்கள் தொண்டர்கள். இறைவனக் கர்ட்டிலும் தொண்டர்கள் மிக்க பயனேத் தருவார்கள். அவனேவிடத் தொண்டர்கள் பெரியவர்கள். இதனை ஒளவைப் பிராட்டி சொல்கிருள். * ' , . .

ஒளவை வாக்கு

BITம் வாழ்கிற இந்த உலகம் மிகப் பெரியது. பெரிய பொருளுக்கு உவமை சொல்ல வேண்டுமானல் இந்த நிலத் தைச் சொல்வார்கள். -

நிலத்தினும் பெரிதே'

என்பது குறுந்தொகைப் பாட்டு. இவ்வளவு பரப்பும் விரிவும் உடைய இந்த நிலம் நாம் கண்ட பொருள்களுக் குள் பெரியது. ஆல்ை இதனேப் படைத்த நான்முகன் இதைவிடப் பெரியவகை இருக்கவேண்டும். புவனம் பெரிதால்ை இதைப் படைத்த பிரமன் இதைவிடப் பெரி யவன். அந்த நான்முகனும் வேறு ஒருவனுடைய படைப்பு. கரிய திருமாலின் உந்திப் பூவிலே தோன்றிய வன் அவன். ஆகவே அந்த நான்முகனேக் காட்டிலும் கரிய திருமால் பெரியவன். அவ்வளவு பெரியவகிைய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிருன். ஆகையால் அவனைக் காட்டிலும் பாற்கடல் பெரியது. கடல் பெரி தாக இருந்தாலும் அகத்திய முனிவர் அந்தக் கடலைத் தம் முடைய கையில் எடுத்து ஆசமனியம் பண்ணிவிட்டார். எனவே கடலேவிடக் குறுமுனி பெரியவர். அவர் கலசத் தில் பிறந்தவர். அதல்ை குடமுனி என்ற பெயரைப் பெற்ருர், ஆகையால் குறுமுனியைவிடக் குடம் பெரியது என்று சொல்ல வேண்டும். அந்தக் கலசமோ மண்ணுல் ஆனது. கலசத்தின் தாயாகிய மண் மிகப் பெரியது. அந்த மண்ணுே ஆதிசேடனுக்கு ஒரு தலைச்சுமையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/137&oldid=575948" இலிருந்து மீள்விக்கப்பட்டது