பக்கம்:தனி வீடு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகையாக அமைந்த நூல்கள் யாவும் இறைவனுடைய பெரும், புகழை விரிவாகச் சொல்கின்றன. இந்தப் புராணப் பெருங்கூட்டத்திற்கு நடுவிலே புதிதாக ஒரு புராணம் தோன்றியது. அந்தப் புராணம் தோன்று வதற்கு முன்னலே மற்றப் புராணங்கள் எல்லாம் சிறந் தனவாக, பெரிய புராணங்களாக இருந்தன. இந்தப் புதிய புராணம் தோன்றிய பிறகு அவைகள் எல்லாம் சிறியவை ஆகிவிட்டன. ஏன் புதிதாக வந்த புராணம் பெரிய புராணம் என்ற பெருங்கீர்த்தியைப் பெற்றது? ஒன்று பெரியதால்ை அது அல்லாத மற்றவை சிறியன வாகத்தான் இருக்கவேண்டும். ஒரு வெளியில் பையன் கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெரிய பையன் வந்தான்' என்று சொன்னல் புதிதாக வந்து சேர்ந்த பெரிய பையன் மற்ற எல்லாப் பையன் களையும் சிறியவர்களாக்கி விட்டான் என்பது விளங்கு கிறது அல்லவா? அப்படியே முன்ல்ை இறைவனைப் பற்றிய புராணங்கள் பெரியனவாக இருந்தன. பெரிய புராணம் வந்த பிறகு அவை சிறிய புராணங்கள் ஆயின், பெரிய புராணம் யாரைப் பற்றிச் சொல்வது? அது தொண்டர்களைப் பற்றிச் சொல்கிற புராணம். அதற்கு அதனுடைய ஆசிரியராகிய சேக்கிழார் சுவாமிகள் வைத்த பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதுதான். தொண் டர்களுடைய பெருமையைச் சொல்கிற அந்தப் புராணம் பெரிய புராணம் ஆகிவிட்டது. காரணம்: அந்தப் புரா ணத்தில் வருகிறவர்கள் யாவரும் இறைவனேக் காட்டிலும் பெரியவர்கள்.

அடியார்க்கு எளியன் இறைவனக் காட்டிலும் அடியார்கள் பெரியவர் கள் என்று நாம் சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. தொண்டர்களால் சிறியவன் ஆகிவிட்ட ஆண்டவனே தான். அடியார்களினும் எளியவன் என்று சொல்லிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/140&oldid=575951" இலிருந்து மீள்விக்கப்பட்டது