பக்கம்:தனி வீடு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை 1 33

பித்துப் பேசுகின்ருர். ஈபவனுக்கு வாங்குகிறவன் இருந் தால்தான் பெருமை. சதலினல் ஒருவனுக்கு இன்பம் வர வேண்டுமானல் அவனிடத்தில் ஏற்றுக்கொள்வான் ஒரு வன் இருக்கவேண்டும். ஆகையால் ஒரு வகையில் பார்த் தால் ஈதலும் ஏற்றலும் ஒன்ருகவே நிகழ்வன என்று தெரியும். . . ... . . . . . ... ஈதலும் இரத்தலும் புறநானூற்றில் ஓர் இடத்தில் ஈதலையும் இரத்தலையும் பற்றி ஒரு புலவர் பேசுகிருர். இழிந்ததிலும் இழிந்தது இன்னது, உயர்ந்ததிலும் உயர்ந்தது. இன்னது என்கிருர், நமக்கு இறைவன் உடம்பையும், அறிவையும், பிற வசதி, யையும் கொடுத்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி முயற்சி செய்து நல்ல வகையில் வாழவேண்டும். அப்படி யின்றி முயற்சி செய்யாமல் சோம்பேறியாகத் திரிந்து, பொருள் ஈட்டாமல் பிறரிடத்தில் சென்று பல்லேக் காட்டிக் கொண்டு ஈ என்று சொல்லுதல் மிகவும் இழிந்த செயல்.

ஈயென இரத்தல் இழிந்தன்று." - அப்படி ஒருவன் மானத்தை விட்டுப் பிறர் இழிவுபடுத்து வதற்குரிய நிலையில் பல்லேக் காட்டி இரக்கும்போது செல் வம் உள்ளவன் ஈதலே முறை. அப்படியின்றி இல்லை என்று சொல்கிருனே அவன் மிகவும் இழிந்தவன். அவனு டைய குணம் இழிந்த குணம். .
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று. இப்படி இழிவையும் அதனினும் இழிவையும் சொன்ன புலவர், உயர்வையும் அதனினும் உயர்வையும் சொல்ல வருகிருர். பிறருடைய குறைபாட்டைக் குறிப்பில்ை தெரிந்துகொண்டு தமக்கு இறைவன் அருளிய செல்வம் பிறருடைய வறுமையை நீக்குவதற்கு என்று அறிந்து,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/143&oldid=575954" இலிருந்து மீள்விக்கப்பட்டது