பக்கம்:தனி வீடு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 32 தனி வீடு م

முடியாது. அந்தப் பெருமானே தன்னுடைய கடிதத்தில் தான் விரும்பிய ஒரு விலாசத்தைப் போட்டுக்கொண் டான். இந்தப் பாட்டில் அது தெளிவாகிறது. அவன் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட பட்டம், அடி யார்க்கு எளியன்' என்பது. இறைவனே அடியார்க்கு எளியன் என்ருல் அடியார் அவனிலும் பெரியவர்கள் என்றுதானே கொள்ளவேண்டும்? -

பெரிய புராணத்தில் வரும் தொண்டர்கள் பெரியவர் கள். இறைவனேக் காட்டிலும் அவர்கள் பெரியவர்கள் என்பதைத் திருக்கூட்டச் சிறப்பு என்னும் பகுதியில் குறிப்பாகச் சேக்கிழார் புலப்படுத்துகிருர். அதை இங்கே சற்று ஆராய்வது உபயோகமாக இருக்கும். -

பெரியோர்

சின்னக் குழந்தைக்கு ஒழுக்கத்தை ஊட்ட வந்த ஒளவை சிறியவர் யார், பெரியவர் யார் என்பதைச் சொல் கிருர் மேல்சாதி, கீழ்சாதி என்று வேறு பிரிப்பதை அவள் சொல்லவில்லே. ஆயினும் இரண்டு சாதிகளேச் சொல்கிருள். ஆண் சாதி, பெண் சாதி என்பதையும் அவர் சொல்லவில்லை. -

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர், இடாதார் இழி குலத்தோர்; பட்டாங்கில் உள்ள படி.' -

இந்த உலகத்தில் தம்மிடம் உள்ள பொருளே யார் பிறருக்குக் கொடுக்கிருர்களோ அவர்களே பெரியவர்கள்; அப்படிக் கொடுக்காமல் இறக்கிறவர்கள் சிறியவர்கள் என்று அந்தப்பாட்டி சொல்கிருள். தமிழ் நாட்டில் ஈகை யின் பெருபையைப் பல் புலவர்கள் மிகச் சிறப்பாகச் சோல்லியிருக்கிருர்கள். திருவள்ளுவர் அதை மிகச் சிறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/142&oldid=575953" இலிருந்து மீள்விக்கப்பட்டது