பக்கம்:தனி வீடு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ட்ர்பெருமை 骨35

செல்வத்தை உடையவர்கள் பிறருக்கு x- ஈங் தாலும் தமக்க்ே செலவழித்துக் கொண்டாலும் அந்தச் செல்வம் குறைந்து விடும். மேலும் ஈட்டி நிரப்பிக் கொள்வார்கள். லாப நஷ்டக் கணக்குப் பார்ப்பதற்குரியது அவர்களிடத் திலுள்ள செல்வம். தொண்டர்களுடைய அருட் செல்வத். திற்குக் கேடு இல்லை; ஆக்கம் ஆகிய வருமானமும் இல்லை. அவர்கள் லாப் கஷ்டம் இல்லாத செல்வர்கள். co

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்.” அருட் செல்வத்தினல் வரும் பாக்கியம் அது. அதனைப் பெற்ற தொண்டர்களிடத்தில் ஒரு பெரிய சக்கரவர்த்தி கேரில் கின்று, உமக்கு வேண்டுவனவற்றைக் கேளும். தருகிறேன். பொன் வேண்டுமா? அரசு வேண்டுமா?' என்று சொன்னல அவர்கள் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். . . . .

திருகாவுக்கரசர் உழவாரத் திருப்பணி செய்யும்போது பொன்னும் மணியும் அங்கே கிடந்தன. அவற்றை யெல்லாம் கல்லேயும் மண்ணையும் போல அவர் ஒதுக்கி விட்டார். இந்த உலகச் செல்வம் தொண்டர்களுக்குக் கவர்ச்சியைத் தருவது இல்லை. ஆதலின் பொருளாளன் ஒருவன் எத்தனே மிகுதியான பொருளை அவர்களுக்குக் கொடுக்க முற்பட்டாலும் அவர்கள் சற்றும் ஆசைப்பட மாட்டார்கள். ... " . : .

இது கிடக்கட்டும். அவர்கள் பிறவாமை யில்லா முத்தியை அடையவேண்டுமென்ற முயற்சியில் ஈடுபடுகிற வர்கள் ஆயிற்றே; அந்தத் தொண்டர்களிடத்தில் பரமேசு வரனே எதிரில் வந்து, இந்தா, மோட்சத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகத்தில் ஏன் இருக்கிறீர்கள்?" என்று சொன்னல், மிகவும் அரிதிற் பெறுவதற்குரிய அந்த மோட்சமாகிய செல்வமும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களாம். நாங்கள் எப்போதும் உன்னு டைய திருவடியைக் கும்பிட்டுக்கொண்டு அதல்ை வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/145&oldid=575956" இலிருந்து மீள்விக்கப்பட்டது