பக்கம்:தனி வீடு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.36 தனி வீடு

கின்ற இன்பத்தை இப்பொழுதே அடைந்து கொண்டிருக் கிருேமே! இதைவிடப் பெரிய இன்பம் மோட்சத்தில் உண்டா? அது எங்களுக்கு வேண்டியதில்லை' என்று சொல்கிற விறல் அவர்களுக்கு உண்டாம்.

வீடும் வேண்டா விறலின் விளங்கினர்' . . என்று தொண்டர்களின் பெருமையைச் சேக்கிழார் சொல் கிருர், வீட்டைக் கொடுக்கிறவன் பரம தாதாவாகிய இறைவன். அவன் கொள் எனக் கொடுக்கிறபோது, கொள்ளேன் என்று சொல்கிற மன இயல்பு உடைய வர்கள் கொடுக்கிறவனேயும் விடப் பெர் ய வ ர் க ள் அல்லவா? - - - * “ . .

கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”

என்ற புலவருடைய வாக்கைக்கொண்டு பார்த்தால் இறைவன் பெரியவன் என்று புலப்படும், வீட்டை யாவருக் கும் கொடுப்பதேைல. ஆனல் அந்த வீட்டையும் கொள் ளேன் என்று சொல்கிற தொண்டர்கள் அவனை விடப் பெரியவர்கள் என்றுதானே சொல்லவேண்டும்?

அடியார்களுக்குத் தங்களுடைய அன்பையும் நெஞ்சை யும் ஆண்டவனுக்குக் கொடுக்கத் தெரியும். அவனிடத்தி லிருந்து இது தா என்று கேட்டு வாங்கத் தெரியாது. உண்மையில் இறைவன். அவர்களுக்கு ஏதேனும் அநுபவம் வழங்குகிருன் என்ருல் அவர்களே அறியாமல் அவர் களிடத்தில் அது சேருகிறது. அவர்கள் கினைப்பின்றி. அந்த இன்ப அநுபவம் நிகழ்கிறது. அதுபவத்தைத் தரு கிறவன், அநுபவிக்கின்றவன், அநுபவம் என்ற மூன்றை யும் கடந்த கிலேயில் அந்த அநுபவம் கேருகிறது. ஆகை யால் அந்த அநுபவ கிலேயில் கொடுப்பார், வாங்குவார் ஆகிய வேற்றுமை இல்லை. திரிபுடியற்ற நிலை என்று சர்ஸ்திரம் இதனைக் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/146&oldid=575957" இலிருந்து மீள்விக்கப்பட்டது