பக்கம்:தனி வீடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி விடு 5 கிலையான வீடு

எப்போதுமே கிலேயாக ஒரு வீட்டில் இருக்கும். வாழ்வு வருமால்ை அவன் சுதந்தரமாக எந்தக் காரியமும் செய்து கொள்ளலாம். ஆல்ை அத்தகைய வாழ்வு வாழும் வீடு இன்னது என்று மக்கள் தெரிந்து கொள்ளவில்லை. பெரியவர்கள் அப்படி ஒரு வீடு உண்டென்று சொல்கிருர் கள். அதற்குத்தான் வீடு என்றே பெயர் கொடுத்திருக் கிரு.ர்கள். வீடு-முத்தி. - . . . . . . . . .

நிலே இல்லாத குடிசையாக இருக்கும் இந்த உடம்பை விட்டு உயிர் நீங்கில்ை மறுபடியும் வேறு ஒரு குடிசைக்குத் தாவுகிறது. பிறவிதோறும் உயிர் விலாசம் மாறிக்கொண் டிருக்கிறது. எப்போதும் ஒரே விலாசம் போட்டுக் கொண்டு வாழ்வதற்கு வகை இல்லாமல் திண்டாடுகிறது. ஒரே விலாசமாக இருக்க வேண்டுமானல் கில்ேயான வீட்டைத் தேடிக்கொள்ள வேண்டும். அப்படித் தேடு கின்ற முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாரோ அவர்களையே பக்தர்கள் என்றும், ஞானிகள் என்றும் சொல்கிரு.ர்கள்.

நாம் தேடிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் அதை நமக்குக் கொடுக்க வேண்டும். அப்படி ஒருவன் இருக்கிருன். அவன் தான் ஆண்டவன். அந்த வீட்டைத் தான் இருந்து வாழ் வதற்காக அவன் வைத்திருக்கவில்லை. தன்னுடைய குழந் தைகள் துன்புருமல் சுதந்தரமாக வாழவேண்டும் என் பதற்காகவே வைத்திருக்கிருன். இருந்தாலும் நல்ல குணம் இல்லாத பிள்ளைகளாக இருந்தால் அவர்களைக் கொஞ்சம் துன்பம் அநுபவிக்கச் செய்துவிட்டு, ஒட்டைக் குடிசையில் இருக்கச் செய்து, அடிக்கடி கட்டிடங்களே மாற்றித் தந்து தண்டனை கொடுக்கிருன். இப்படி வாழ்கின்ற கில்ே போதும், அப்பா. இனிமேல் இத்தகைய வீடுகளில் நான் இருக்கமாட்டேன். நல்ல வீடாகத் தா"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/15&oldid=575826" இலிருந்து மீள்விக்கப்பட்டது