பக்கம்:தனி வீடு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#40 தனி வீடு

மானை அடையாளம் காட்டுகிருர். நோயாளியினுடைய கோயை நன்கு அறிந்து, உனக்கு இதுதான் மருந்து, இதைத் தவிர வேறு பரிகாரம் இல்லே' என்று சொல்லும் மருத்துவரைப் போல, இந்தத் தொண்டர் குழாத்தைச் சாரில் கதியன்றி வேறு இல்லை என்று அடித்துப் பேசு கிரு.ர். - - - - -

நம்முடைய பாவி கெடு நெஞ்சத்திற்கு வந்த நோய் என்ன? பதவி ஆசையும், பணத்தாசையும் கொண்டு தேரி லும், கரியிலும், பரியிலும் தண்டு தாவடி போய்த் திரி கின்றவர்களுடைய செல்வம் சிறந்தது என்று நினேந்து ஏமாந்து போகிறது. இது. அவை நீரில் பொறி என்று அறிவதில்லை; பதவியையும் பணத்தையும் பெரியன என்று கருதுகிறது. இந்த நோய்க்கு மருந்து, வேண்டாமை என்பதுதான். அந்த மருந்தை வைத்திருக்கிறவர்கள் தொண்டர்கன். அது எப்படித் தெரிகிறது? அந்தத் தொண்டர் குழாம் போற்றுகின்ற மருத்துவத் தலைவன் இந்த நோயைத் தீர்ப்பதில் மிகவும் வல்லவன். சூரனேயும் கிரெளஞ்ச மலையையும் தன்னுடைய கதிர் வேலால் எறிந் தவன். - - -

ஆயிரத்தெட்டு அண்டங்களே ஆண்டு கொண்டிருக் தான் சூரன். அத்தனே அண்டங்களுக்கும் ஏகபோக சக்கரவர்த்தியாக வாழ்வதில் அவனுக்கு ஒரு பெரும்ை இருந்தது. அந்த கிலே போதாது என்று கருதி அமராவதி யையும் ஆளவேண்டும், இந்திர பதவியையும் தான் பெற வேண்டும் என்று விரும்பின்ை. அதல்ை தேவலோகத்தின் மேல் படையெடுத்து அமராவதியைத் தன் கீழ் அடக்கிக் கொண்டு, இந்திரனேயும் அவன் பதவியிலிருந்து விலக்கி விட்டான். சுரேந்திரனே வென்று தான் அசுரேந் திரனுகவேண்டும் என்று விரும்பின்ை. அவனிடம் எல்லா விதமான பொருள்களும் குவிந்திருந்தன. நாம் பணத்தை மலேபோலக் குவிக்க வேண்டுமேன்று சொல்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/150&oldid=575961" இலிருந்து மீள்விக்கப்பட்டது