பக்கம்:தனி வீடு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ட பெருமை - 1 4 || |

சிறந்த செல்வர்களைப் பற்றிப் பேசும்போது மலேமலையாய் ரூபாயைக் குவித்து வைத்திருக்கிருர் என்று சொல்வது உண்டு. அப்படி ஒரு செல்வன் எத்தனே சேர்த்துக் கொண்டாலும் குரனைப் போல யாரும் சேர்த்துக்கொள்ள முடியாது. அவன் ஒரு மலையையே துணையாக வைத்திருந் தான். அந்த மலைதான் கிரெளஞ்சாசுரன். சூரனுடைய பதவியும், மலேயும் கல்லவர்களுக்கு மாருக இருந்தன. அந்த இரண்டிலும் அசுரலோகம் இன்பத்தை அடைந்தது; தேவலோகம் துன்பத்தை அடைந்தது. பதவி ஆசையே உருவமாகிய சூரனும், பணத்தாசையே உருவமாகிய கிரெளஞ்சனும் ஞானமே உருவமாகிய வேலில்ை பொடி பட்டுப் டோயினர். . . . . -

சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன்

முருகன். --

அருணகிரியார் இங்கே கதிர்வேலை எறிந்து பொடி யாக்கின்ை என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவன் எறிந்தால் அவை நிச்சயமாக அழியும் என்பது தெளிந்த உண்மை. முருகன் வேலை எறிந்தான் என்ருல் வேறு ஏது சிகழ முடியும்? -

மூன்றுவகைப் பக்தி

பக்தியில் மூன்று வகை உண்டு. குரு பக்தி, லிங்க பக்தி, சங்கம் பக்தி என்று சொல்வார்கள். ஞானசிரியனை அடுத்துப் பக்தி செய்வது குரு பக்தி. இறைவனிடத்தில் அன்பு செய்வது லிங்க பக்தி அல்லது சிவபக்தி. அடியார் களிடத்தில் அன்பு வைத்து ஒழுகுவது சங்கம பக்தி என்று சொல்வார்கள். சங்கமர்கள் . தொண்டர்கள். அடி, யார்களுடைய கூட்டத்தில் வாழ்வதில் நமக்கு ஒரு லாபம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் வாழ்ந்தால் நமக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/151&oldid=575962" இலிருந்து மீள்விக்கப்பட்டது