பக்கம்:தனி வீடு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 42 தனி வீடு

குரு கிடைப்பான். குருவின் திருவருள் கிடைத்தால் இறைவன் திருவருள் பின்பு கிடைக்கும். எடுத்தவுடன் குரு நமக்குக் கிடைப்பதில்லை.

குருவை அடைய வேண்டுமானல் அதற்குச் சில பக்கு வம் வேண்டும். அந்தப் பக்குவம் நம்மிடத்தில் உண்டா வதற்கு அடியார்கள் கூட்டத்தில் பழகவேண்டும். அதனல் நல்ல காரியம் செய்வதற்குரிய கிலே நம்மிடம் உண்டா கிறது. பிறருக்கு அந்த கிலே உண்டாவது இல்லை. கோபத்தினல் வீதியில் கின்று நூறு பேர் கேட்க யாரோ ஒருவரைத் திட்டுகிருேம். ஆல்ை இறைவன் திருநாமத் தைப் பிறர் காது கேட்கும்படி சொல்வதற்கு காணமாக இருக்கிறது. பழங்காலத்தில் நாணம் இ ரு ங் த ேத ர இல்லையோ, இப்போது ரிச்சயமாக இருக்கிறது. நெற்றி யில் திருநீறு அணிவதற்கு நாணம், ருத்திராட்சம் அணிந்து கொள்வதற்கு காணம், கை தட்டிப் பஜனே செய்வதில் நாணம். இப்படியுள்ள நம்முடைய காணம் போக வேண்டு மால்ை அடியார்களுடைய கூட்டத்தில் பழக வேண்டும். அப்படிப் பழகினல் அவர்களுடைய கூட்டுறவால் காணம் கழன்று போய் நாமும் அவர்களைப் போல இறைவனைத் துதிக்கத் தொடங்குவோம்.

நம்முடைய குரல் நன்ருக இல்லையே என்று காணம் உண்டாவது இயற்கை. தனியே பாடில்ை நம்முடைய குரலின் குறைபாட்டைத் தெரிந்து கொள்கிருர்களே என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் இருபது பேர் சேர்ந்து பாடுகிற கூட்டத்தில் நாமும் சேர்ந்து மெல்ல மெல்லப் பாடினல் நம் குரலை யாரும் அறியமாட்டார்கள். தொண்டர் கூட்டத்தில் கலந்துகொண்டு பஜனை செய்யும் போது நம்மை அறியாமல் வாய் முனு முணுக்கிறது; பாடுகிறது. அதல்ைதான், கூட்டத்தில் கோவிந்தா போடுவது' என்கிற பழமொழி வந்தது. நாணத்தைப் போக்குவதற்கும், சோம்பலைப் போக்குவதற்கும் அடியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/152&oldid=575963" இலிருந்து மீள்விக்கப்பட்டது