பக்கம்:தனி வீடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தனி வீடு

னேன். இந்த வாழ்க்கையில் பெறுகின்ற துன்பம் மேன் மேலும் என்னே உறுத்தியது. அதனல் கைங்து இந்த வாழ்க்கையை மாற்றுவதற்கு எண்ணினேன். எம்பெரு மானும், என்னுடைய கருணைத் தந்தையும் ஆகிய ஆண்ட வனிடத்தில் முறையிட்டுக் கொண்டேன். அந்தப் பெரு மான் என்னுடைய வேண்டுகோளைச் செவிமடுத்து, நீ இந்தப் பூதவீட்டில் இருக்கவேண்டாம். ஒருவரும் அறி. யாத தனிவீட்டில் இருப்பாயாக. அங்கே சுகமாகத் தங்கு வாயாக. எப்போதும் சளசள வென்று பேசுகின்ற இந்த வாழ்வைப்போல இராமல் ஒரு பேச்சும் இன்றி ஒரு சிந்தனையும் இன்றிச் சுகமாகத் தூங்கு என்று சொன் ன்ை.'-இப்படி அருணகிரியார் தெரிவிக்கிருர்.

ஒரு ஆதரும் அறியாத் தனி வீட்டில் உரை உணர்வு அற்று இரு, பூத வீட்டில் இராமல் என்றன்.

ஒரு பூதரும் அறியா வீடு, தனி வீடு அது. அந்த வீட்டில் ஒரு யூதரும் அறியாமல் தனியாக கான் இருக்கும் படி, உரை அற்று, உணர்வு அற்று இருக்கும்படியாகச் செய்தான். இழிந்த வீட்டை மாற்றி உயர்ந்த திருமாளிகை யில் என்ன வைத்தான் என்று அலங்காரமாக அருணகிரி பார் சொல்கிருர். அதன் கருத்து, பெளதிகமான சரீரத்தை விட்டு என்றும் மாருத இன்பத்தைத் தருகின்ற முத்தி வீட்டை எனக்குக் கொடுத்தான் என்பதே.

இந்த உடம்பைப் பதவிடு என்று சுட்டினர். ஐந்து பூதங்களால் அமைந்தது; ஆகையால் இது பூத வீடு ஆயிற்று. இனி முத்தியைப் பற்றி, ஒரு யூதரும் அறியா வீடு, தனி வீடு, உரையற்ற வீடு; உணர்வற்ற வீடு என்று.

தெரிந்து கொள்ளும்படி பாட்டில் சொல்கிருர், ‘. .

பூதிர் என்பது. மனிதருக்குப் பெயர். உலகிலுள்ள மக்கள் யாரும் முத்தி இன்ப்த்தை உணர இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/18&oldid=575829" இலிருந்து மீள்விக்கப்பட்டது