பக்கம்:தனி வீடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு - 9.

அவ்வின் பத்தில் கூட்டம் இல்லை. எல்லாம் ஒன்ருக இணைந்து இருக்கிற இடம் அது. இறைவன், ஆத்மா என்ற பிரிவு கூடத் தோற்ருமல் அத்துவித நிலையில், ே வேறு எனது இருக்க, நான் வேறு எனது இருக்க” என் 2 படி இணைந்து குலவும் வீடு அது. உடல், உரை, மனம் ஆகிய மூன்று கரணங்களையும் தாண்டி அமைந்த இடம் அது. இந்த வீடு உடம்பு. இதனை விட்டு விடுகிருேம். அந்த வீட்டிலோ உரையும் கினைவும் இல்லை. மனத்திற்கும் வாக்குக்கும் அப்பாற்பட்ட இடம் ஆகையால் அது உரை யும் உணர்வும் அற்ற இடம். பல பேச்சுகளைப் பேசு வதல்ை துன்புற்றுப் பல வகையான கவலைகளில்ை வாடி வதங்கி இன்னல் உறுகின்ற ஒருவரைப் பேச்சு இல்லாது, கவலைக்கு இடம் இல்லாது, கூட்டமே இல்லாது, யாரும் வர முடியாத தனியான சுதந்தர வீட்டில் வைத்துக் காப் பாற்றியது போன்ற ஒரு சித்திரத்தை அருணகிரிநாதர் திட்டுகிருர். -

2

இனி இப்படித் தந்த பெருமான் யார் என்பதை விரி வாகச் சொல்கிருர். முருகப் பெருமானுடைய புகழ் அங்கே வருகிறது. அவன் சிவபெருமானுடைய குரு. நாதன், வேலாயுதன்; சூரனை அழித்தவன்’ என்று மூன்று நிலையைச் சொல்கிருர், -

குமா குருபரன்

உலகத்திலுள்ள மக்களுக்கு எல்லாம் சாதுக்களாக இருக்கிறவர்கள் குருவாக அமைவார்கள். அவர்களுக்குத்

துறவிகள் ஆசிரியர்களாக இருப்பார்கள். துறவிகளுடைய பரம்பரையைப் பார்த்தால் அவர்களுடைய மூல ஆசிரி யர்கள் முனிபுங்கவர்களாக இருப்பார்கள். அந்த முனி புங்கவர்களுள் சிறந்தவர்கள் சனகர் முதலிய நான்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/19&oldid=575830" இலிருந்து மீள்விக்கப்பட்டது