பக்கம்:தனி வீடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு - 1 5

அழித்தவன். மூன்று புரங்கள் என்பவை மூன்று மலங் களுக்கு அடையாளம். மூன்று மலங்களால் ஆன கோட் டைக்குள் அகப்பட்டு, கட்டுப்பட்டு, ஆன்மா வீடு அடை யாமல் இருக்கிறது. வீட்டைப் பெற வேண்டுமானல் மூன்று மலங்களையும் போக்க வேண்டும். இறைவன் மூன்று மலங்களேயும் தன்னுடைய திருவருளால் அழித்து உயிர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்வான். இந்த அரிய கருத்தைத்தான் அவன் மூன்று புரங்களை அழித்த கதை தெரிவிக்கிறது. மூன்று புரங்கள், மூன்று மலங்கள். அவற்றில் இருந்த அசுரர்கள் ஆன்மாக்கள். இறைவன் மூன்று புரங்களே மாத்திரம் அழித்தானே அன்றி, புரங் களில் இருந்த அசுரர்களே அழிக்கவில்லை. புரங்களைச் சுட்டு எரித்த பிறகு அந்த மூவரையும் தன்னுடைய அனுக்கத் தொண்டர்களாக ஆக்கிக் கொண்டான். ஒருவனே மத்தளம் வாசிக்கும் தொண்டனுகவும், மற்ற இருவரை யும் வாயில் காவலராகவும் அமைத்துக் கொண்டான் என்று புராணம் சொல்கிறது. ஆன்மாக்களுக்குரிய மூன்று மலங்களையும் அழித்து ஒழித்து அவ் வான்மாக் களைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் பேரருள்ாளன் என்பதைத் திரிபுராந்தககை இருந்து எம்பெருமான் காட்டுகிருன். .. . . -

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்; முப்புர மாவது மும்மல காரியம்; அப்புரம் எய்தமை யாரறி வாரே

என்று புரம் எரித்த செயலுக்கு உள்ளுறை கூறுவர் திருமூலர். w

எனவே, இருகோட்டு ஒரு கைப் பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகன்' என்று சிவபெரு மானச் சொன்னமையில்ை அவன் ஆணவத்தை அழிக்கும் திறல் பெற்றவன், மும்மலத்தைப் போக்கும் மூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/25&oldid=575836" இலிருந்து மீள்விக்கப்பட்டது