பக்கம்:தனி வீடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 - தனி வீடு

வீட்டில் வைத்திருப்பது உலக வழக்கம். அவர்கள் வீட்டுக்குப் போேைலயே அவர்கள் அந்த விலங்குகளை வேட்டையாடின வீரர்கள் என்பது புலப்படும்.

அவ்வண்ணமே எம்பெருமான் ஆ&னத் தோல் ஆடையை மேலே போட்டுக் கொண்டிருக்கிருன். தான் செய்த வீரச் செயலே எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று அதனைச் செய்யவில்லை. ஆணவத்தால் துன்புறு கின்ற ஆருயிர்களுக்கு அந்த ஆணவத்தைப் போக்குவதற் குரிய திருவருள் இந்தப் பெருமானிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்குவதற்காகவே அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டிருக்கிருன். -

எங்கேனும் விழா நடந்தாலும் வேறு வகையான கூட்டங்கள் கடந்தாலும் அங்கே தொண்டர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அந்தத் தொண்டர்களுக்குத் தலைவராக இருப்பவர் அவர்களே இயக்குவிப்பார். அவர் களுக்கெல்லாம் தம்முடைய சட்டையில் போட்டுக்கொள் வதற்குச் சில வகையான அடையாளச் சின்னங்களேத் தருவார்கள். அந்தச் சின்னங்களைக் கொண்டு, இவர்களால் இன்ன காரியத்தைச் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வரும். அந்தத் தொண்டர்களை அழைத்துத் தமக்கு உதவி செய்யும்படி வேண்டிக் கொள் வார்கள். அந்த அடையாளச் சின்னங்கள், மற்றவர்கள். அவர்களே அணுகி உதவி கேட்பதற்குத் துணையாக இருப்பது போல, எம்பெருமான் போர்த்துக் கொண்ட யானைத் தோல் ஆணவம் நீங்குவதற்கு வேண்டிய திருவருளே இவன் வழங்குவான் என்பதற்கு அடையாள மாக இருக்கிறது. - . . - -

- புராந்தகன் * * * அடுத்தபடியாகப் புராந்தகன் என்று சொல்கிருர். - புரத்திற்கு அந்தகன் சிவபெருமான்; மூன்று புரங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/24&oldid=575835" இலிருந்து மீள்விக்கப்பட்டது