பக்கம்:தனி வீடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தனி வீடு

மாயை உலகம் எங்கும் பரவி இருப்பினும் நம்மிடத் தில் மனத்தின் உருவாக இருக்கிறது. ஒரு பெண் தன் கணவனேத் தன் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடு கிருள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு அவள் செய்யும் அதிகாரத்தைக் கேட்க வேண்டாம். அவளுடைய பிறந்தகம் பணக்கார வீடாக இருந்துவிட்டால் அவளுக் குத் தலைகால் தெரியாது. அவளுடைய கணவன் மாமி யாருக்கு அடிமை, மாமருைக்கு அடிமை; அந்த வீட்டி லுள்ள எல்லோருக்கும் அடிமையாகி விடுகிருன். அங்கே வேலைக்காரகை வாழ்கிருன். இதற்கெல்லாம் காரணம் என்ன? மாமியாருக்கும் மாமருைக்கும் அவன் அடிமையாக இருப்பதற்கு அவர்களிடத்தில் உண்டான நேர்த் தொடர்பு காரணம் அன்று. அவன் மனைவிக்கு முதலில் அடிமையாக இருக்கிருன். அதனுல் மாமனர் மாமியாருக்கு அடிமை ஆகிருன். அப்படியே மனத்திற்கு நாம் அடிமை ஆகிற போது மாயைக்கும் அடிமையாகி விடுகிருேம். மாயை என்ற பெரிய ஆற்றிலிருந்து வரும் கால்வாய் மனம்.

மனம் மூலமாக இருக்க நாம் விளையாடும் விளை யாட்டை மன விளையாட்டு அல்லது மாயை விளையாட்டு என்று சொல்லலாம். மாயை விளையாட்டு மாற வேண்டு மால்ை மனத்தின் விளையாட்டு மாற வேண்டும்.

விளையாட்டும் வினையும்

மாம் இறைவனுடைய குழந்தைகளாக இருக்கிருேம். ஆனல் நம்மிடத்தில் குழந்தைத் தன்மை இல்லை. குழந்தை கள் செய்வது விளையாட்டு என்று பொதுவாகச் சொல் கிருேம். ஆனல் பொல்லாத குழந்தைகள் விளையாட்டை வினையாக்கி விடுகின்றன. தீபாவளியில் குழந்தைகள் வாணம் விட்டு விளையாடுகிருர்கள்; பட்டாசு வெடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/32&oldid=575843" இலிருந்து மீள்விக்கப்பட்டது