பக்கம்:தனி வீடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தனி வீடு

மாயை விளையாட்டு

பிரபஞ்ச் நாடகம் ஆடும் உயிர்களுக்கு மனம் பொல் லாத குழந்தையாக இருக்கிறது. ஐந்து இந்திரியங்கள் என்னும் கத்திகளை வீசி விளையாடுகிற பொல்லாத குழந்தை அது விளையாடுகிற விளையாட்டு வினே விளை யாட்டு அல்லது மாயை விளையாடடு தீய விளையாட்டை விளையாடும் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு உலகத்தார் அபவாதம் உண்டாகிறது: அரசாங்கத்தில் தண்டனை கிடைக்கிறது. இந்த மாயை விளையாட்டு விளையாடும் மனத்தைப் பெற்ற உயிர்களுக்கு மேன்மேலும் துன்பங்கள் விளேகின்றன; பிறவியாகிய தண்டனை கிடைக்கிறது. அதல்ை அந்தக் குழந்தையே வேண்டாமென்று சொல்வது போலப் பெரியவர்கள் மனமே வேண்டாமென்று சொன் ர்ைகள்; மனம் இல்லாத நிலை வேண்டுமென்றும், மனம் செத்துப் போக வேண்டுமென்றும் வேண்டினர்கள்.

மனம் மாறுபட்ட விளையாட்டைச் செய்வதற்குக் காரணம் அதனிடத்தில் ஏதோ நோய் இருக்கிறது. அந்த நோய்க்கு அஞ்ஞானம் அல்லது அறியாமை என்று பெயர். பித்தம் ஏறி இருப்பதல்ை குழந்தை பொல்லாங்கான செயல்களைச் செய்கிறது என்று சொல்வது வழக்கம். அப்படியே இந்த மனமும் அஞ்ஞானம் என்ற நோயைப் பெற்று மாயை விளையாட்டை விளையாடுகிறது. அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்தால் நல்ல விளையாட்டை விளே யாடும். அஞ்ஞானம் என்ற நோய்க்குப் பரிகாரம் ஞானம் அல்லது நல்ல அறிவு. ஆண்டவனப்பற்றி அறிந்து அவன் திருவருள் பெறும் ஆர்வத்தால் நல்ல முறையில் முயற்சி' செய்வது பேரின்பத்தை அடைய வேண்டுமென்ற அறிவை மனம் கொள்ளவேண்டும். அதற்கு வழி செய்வது ஞானம். அஞ்ஞானத்தைப் போக்கும் முயற்சி தொடங்கும்போது ஞான நாடகம் தொடங்குகிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/34&oldid=575845" இலிருந்து மீள்விக்கப்பட்டது