பக்கம்:தனி வீடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு 25

மனிதக் குழந்தைகள் உலகில் வாழும்போது விளையா டும் விளையாட்டு, ஒன்று ஊன நாடகமாக இருக்கும்; அல்லது ஞான நாடகமாக இருக்கும். ஊன நாடகத்தை மாயை நாடகம் அல்லது அஞ்ஞான நாடகம் என்று சொல்லலாம். இந்த நாடகம் அல்லது விளையாட்டு மேன் மேலும் வினைகளை விளைத்துத் திரும்பத் திரும்பப் பிறந்து

இறந்து துன்புறும்படி செய்கிறது.

சேறும் கரையும்

இந்த மாயை விளையாட்டுப் போக வேண்டுமானுல் அதற்கு மாருக ஞான விளையாட்டு விளையாட வேண்டும். அதற்குத் துனே இல்லாமல் நம்மால் முடியாது. சேற்றில் இருப்பவன் ஒருவன் அதிலிருந்து எழ வேண்டுமானல் சேற்றுக்கு அப்பால் இருக்கும் ஒருவனது துணைவேண்டும். கால் புதைந்துவிட்டது என்று, அதனே விடுவிக்கக் கை களையும் சேற்றில் புதைத்தால் கால் வெளியில் வராது; கையும் சேர்ந்து புதைந்துவிடும். சேற்றில் இருக்கும் வேறு ஒருவனது உதவியை நாடில்ை அவனலும் நம்மை மீட்க முடியாது. தண்ணிருக்குள் மூழ்குகின்றவனேக் காப் பாற்றுவதற்காகக் கரையிலிருந்து தண்ணிரில் குதித்து விட்டால் இரண்டு பேரும் நீரில் மூழ்கி இறந்துவிடுவதைப் பல இடங்களில் நாம் பார்க்கிருேம். அது போலவே சேற்றில் விழுந்தவனேக் கரையேற்றுவதற்குச் சேற்றில் விழுந்த வேறு ஒருவல்ை முடியாது. அப்படியின்றிச் சேற்றுக்கு அப்பால் கரையில் ஒருவன் இருந்தால் அவன் கரையேற்ற முடியும்; கரையில் உள்ளவன் கை கொடுத் தாலும் சரி, சேற்றில் இருப்பவன் கையை நீட்டிப் பற்றிக் கொண்டாலும் சரி, கரையேறிவிடலாம்.

- அஞ்ஞான நாடகம் ஆடும் மனம் ஞானகாடகம் ஆடும் கரைக்குப் போக வேண்டும். அந்தக் கரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/35&oldid=575846" இலிருந்து மீள்விக்கப்பட்டது