பக்கம்:தனி வீடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு 29

நக்கீரர் சொல்வது

கிருணை உள்ளவர்கள் முயற்சியின் தொடக்கத் திலேயே. அதைப் பாராட்டுவார்கள். மிக்க முயற்சி செய்த பிறகு அவனுக்கு ஊக்கம் அளிக்கலாம் என்று காத்திருக்க மாட்டார்கள். திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஒரு புலவனுக்கு முருகனே அடைய வழி காட்டுவதுபோலப் பாடி இருக்கிருர், முருகன் எங்கே இருக்கிருன் என்று புலவன் கேட்ட கேள்விக்கு விடை சொல்லும் முறையில் பாட்டு அமைந்து இருக்கிறது. நான் முருகனேப் பார்க்க வேண்டும்' எனறு சொன்ன மாத்திரத்தில் வழிகாட்டும். புலவருக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அப்பா, நீ உடனே அவனேக் காண்பாய். ஊரை விட்டு, வீட்டை விட்டு அவனைக் காணவேண்டும் என்று நீ புறப்பட்டுவிட்டாயே! அதுவே பெரிய காரீயம். எதை எதையோ ஆதாரமாகக் கருதி ஊன விளையாட்டை ஆடிக்கொண்டிருந்த நீ இறை. வனேக் காண வேண்டுமென்று நேர் எதிர்த்திசையில் திரும்பினயே; பெரிய காரியம் ஆண்டவன் திருவருள் உனக்குக் கிடைக்கும். இன்று கிடைக்கும் என்பது மாத் திரம் அல்ல; இப்பொழுதே கிடைக்கும்” என்கிருர்,

  • சேவடி படரும் செம்மல் உள்ளமொடு

கலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் മ8ാഖ8 கயந்தன. ஆயின், பலவுடன் . . நன்னர் கெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதி முன்னிய வினையே."

திட்சை பெறவில்லையே மந்திர ஜபம் பண்ன வில்லையே! தலங்களைத் தரிசிக்கவில்லையே' என்று சொல்லிப் பயமுறுத்தவில்லே. இறைவனேக் காணவேண்டு மென்ற எண்ணத்தோடு முயற்சியைத் தொடங்கியதே பாராட்டுவதற்குரிய செயல் என்பது அவர் எண்ணம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/39&oldid=575850" இலிருந்து மீள்விக்கப்பட்டது