பக்கம்:தனி வீடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 தனி வீடு

இறைவன் பெருங்கருணை

  • БПр இறைவனைப் பூசை செய்கிருேம்; சகசிரநாம அருச்சனை செய்கிருேம். அதல்ைதான் இத்தனே நன்மை கொடுத்திருக்கிருன் எனறு எண்ணுவது தவறு. "ஒரு ரூபாய் கொடுத்தோம்; ஒரு விசை மாவு தந்தார்' என்று செட்டியாரைப் பற்றிச் சொல்வது போன்றது அது. நாம் செய்த காரியத்திற்கு ஏற்ற கூலிதான் கிடைக்கிறது என்ருல், நாம் செய்யும் தப்பான காரியங்களுக்கும் உரிய கூலியை எதிர்பார்க்க வேண்டும். காம் செய்த நன்மை களைக் காட்டிலும் தீமைகளே அதிகம். நாம் எத்தனையோ பேரை உதைத்திருப்போம். எத்தனையோ அன்பர்களே வைதிருப்போம். எத்தனேயோ பெரியவர்களுக்குத் தவறு i&னத்திருப்போம். அப்படிச் செய்த தீங்குக்கு இறைவன் கூலி கொடுக்க வேண்டுமால்ை உதைத்த கால் முடமாக வேண்டும்; வைத வாய் ஊமையாக வேண்டும், பல வித மாகப் பெரியவர்களை எண்ணிய மனம் பைத்தியமாகி இருக்க வேண்டும். ஆல்ை இறைவன் அப்படிப் பண்ண வில்லை. அவனுக்கு நம்மிடத்தில் உள்ள பெருங்கருனே அத்தகையது.

அவனைச் சிறிதளவு நினைத்தால் போதும்; நம்மை கினைத்தானே என்று மகிழ்ச்சி அடைவான். நாம் அவனு டைய அருளைப் பெற வேண்டுமென்று ஓர் அடி கடந்தால் அவன் பத்து அடி எதிர்கொண்டு அழைக்க வருகிருன். திருச்செந்துரை நினைத்து வணங்கில்ை புண்ணியம், அந்தத் திசையில் திரும்பினல் புண்ணியம் என்று புராணங்கள் சொல்கின்றன. ஆண்டவனுடைய பெருங் கருணையைப் புலப்படுத்துவதற்கு அப்படிச் சொல்வது ஒரு முறை. என் பெயரைச் சொன்னல் போதும்; உடனே எல்லாம் செய்து கொடுப்பான்' என்று நாம் சொல்வதில்லையா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/38&oldid=575849" இலிருந்து மீள்விக்கப்பட்டது