பக்கம்:தனி வீடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு 27

யைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிருள். அதற்குக் காரணம் தளர்நடை அழகு என்பது அன்று; இனி நன்ருக நடக்கும் என்ற கம்பிக்கை அதல்ை உண்டாகிறது. தளர் நடை கடக்கும் காலுக்குத் தண்டை அணிகிருள்.

அவளுடைய வீட்டுக்கு ஒருவன் ஒரு மூட்டை அரிசி கொண்டு வருகிருன். அதை உள்ளே கொண்டுபோக வேண்டும். தாய் அதை எடுத்து உள்ளே போடுவதற்கு முயலும்போது சின்னஞ்சிறு குழந்தை, நானும் தாக்கு கிறேன்' என்று சேர்ந்து கொள்கிறது. குழந்தை யினுடைய முயற்சியால் மூட்டை உள்ளே வந்துவிட் வில்லை என்று தாய்க்குத் தெரியும். ஆனல், ' என் குழந்தை இந்த மூட்டையை உள்ளே போடடது” என்று சொல்லிக் கிளுகிளுப்பை அடைகிருள். அந்த மூட்டையை அது துளக்கவில்லையான லும் தூக்குவதற்கு முயன்றதே, அதைக் கண்டு அவளுககு மகிழ்ச்சி உண்டாகிறது. --

அப்படியே இறைவனிடத்தில் நமக்கு அன்பு உதய மால்ை போதும், அதற்கு மகிழ்ந்து அவன் அருளே நமக்கு வழங்கத் தொடங்குகிருன் தன்னே கினேப்பதற்கு வேண் டிய கருவிகளே எல்லாம் மக்களுக்குக் கொடுத்திருக்கிருன். தனு கரண புவன போகங்களைக் கொடுத்து, அவற்றைக் கருவியாக வைத்துக்கொண்டு தன் பேரருளைப் பெறு வதற்கு முயல்வார்கள் என்று அவன் எதிர்பார்க்கிருன். முயற்சி இல்லாமல் கொடுத்தால் கொடுக்கும் பொருளுக் கும் பயன் இராது மதிப்பும் இராது. முயற்சி செய்வதல்ை பெறுகின்ற பொருளுக்குப் பயன் உண்டு என்பதை அறிந்தே அவன் மக்களின் முயற்சியை எதிர்பார்க்கிருன். அந்த முயற்சியும் அவன் அருளுகிற பயனும் அளவில்ை ஒத்திருக்கும் என்று சொல்ல இயலாது. அவன் சிறு முயற்சிக்குப் பன்மடங்கு நன்மையை அருளுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/37&oldid=575848" இலிருந்து மீள்விக்கப்பட்டது