பக்கம்:தனி வீடு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 . . தனி வீடு

உண்டாகும். இது மாய்வதற்கு ஞான விநோதமாகிய மருந்து வேண்டும். -

காமமும் துவட்சியும்

ஒருவனுக்கு நோய் வருகிறது. கோய் உடையவன் டாக்டரிடத்தில் போனல் அவர், என்ன செய்கிறது?" என்று கேட்கிரு.ர். அவனுக்கு எத்தனையோ நோய்கள் இருந்தாலும் எது மிகுதியாக இருக்கிறதோ அதைத்தான் சொல்வான். ஒருவனுக்கு வயிற்றுவலி. அதோடு கண் எரிகிறது. கால் குடைச்சல் ஏற்படுகிறது. இவ்வளவு இருந்தும் வயிற்றுவலிதான் பொறுக்க முடியாமல் மிகுதி யாக இருக்கிறது. டாக்டர் என்ன பண்ணுகிறது என்று கேட்டவுடன், ஐயோ! வயிற்றுவலி தாங்க முடிய வில்லே!” என்று முதலில் சொல்வான். டாக்டர் விசாரித்தால் ஒவ்வொன்ருக மற்றச் சிறு வியாதிகளைச் சொல்வான். டாக்டர் கேளாமலே முதலில் அவன் சொல்வது வயிற்றுவலியைத்தான். காரணம்: அவனிடத் தில் உள்ள நோய்களுக்குள் அதுதான் மிக்க துன்பத்தைத் தருவது. .

மாயா விநோத மனே துக்கம் என்று சொல்கிருயே! அந்த நோய் உனக்கு என்ன துன்பத்தைத் தருகிறது?" என்று முருகன் கேட்கிருன். அருணகிரிநாதர் ஆகிய நோயாளி பல நோய்களே உடையவரேனும் அவற்றுள். மிக்க துன்பத்தைத் தரும் ஒன்றை எடுத்துச் சொல்கிறர்.

சித்ா மாதர் அல்குல் தோயா - உருகிப் பருகிப் - பெருகித் துவளும் இந்த, மாயா விநோத மைேதுக்கம்.

மோதருடைய மயலில் நான் உருகுகிறேன். அந்த மயலேப் பருகுகிறேன். அது மேன்மேலும் பெருகுகிறது. அதல்ை துவண்டு போகிறேன். ஏதேனும் நல்லது சய்ய லாம் என்று நினைத்தால் எனக்கு உறுதி இருப்பது இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/44&oldid=575855" இலிருந்து மீள்விக்கப்பட்டது