பக்கம்:தனி வீடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தனி வீடு

ஆசையை எடுத்துச் சொன் னர். அப்படிச் சொன்னலும்

மற்ற ஆசைகளையும் நாம் கொள்ளவேண்டும். தலைமை

யாக உள்ள ஒன்றைச் சொல்லி அதல்ை மற்றவற்றைப் பெறுவதற்கு இலக்கணத்தில் ஒரு பெயர் கொடுத்திருக்

கிருர்கள். அதை உடலட்சணம் என்று சொல்வார்கள்.

உபலட்சணத்தால், சித்ர மாதர் ஆசையைச் சொன்னலும்

மற்ற ஆசைகளையும் கொள்ள வேண்டும்.

சித்ர மாதர்

“སྡ, . . . . . . இங்கே அருணகிரியார் குறிக்கும் மாதர்கள் இல்லறத் திற்குத் துணையாக இருக்கும் தர்ம பத்தினிகள் அல்ல. சித்திரம்-அலங்காரம். பிறர் உள்ளத்தைக் கவர்வதற்கு விளம்பரம் செய்து கொள்வது போலத் தம்மை நாலு பேர் பார்க்கும்படியாக அலங்காாம் செய்து கொள்ளும் தீய

மாதரைத்தான் சித்ர மாதர் என்று குறித்தார். அவர், காலத்தில் அத்தகையோர்கள் மிகுதியாக இருந்தார்கள் போலும் அத்தகைய தீய மாதர்களுடைய வலையிலே பட்டு உருகிப் பெருகித் துவளும் மனே துக்கத்தை அருண கிரியார் குறிக்கிருர் . ... - -

எனக்கு என்று செயல் ஒன்றும் இல்லாமல் நான் துவண்டு போகிறேன். அதற்குக் காரணம் என் தலைக்கு ஏறிய பித்தம். அந்தப் பித்தம் மேன்மேலும் பெருகிக் கொண்டு வருகிறது. சித்திர மாதரால் வந்த பித்தம் அது. இப்படி எனக்குப் பித்தம் பிடிப்பதற்கு மூல காரணமாக இருப்பது மனத்தில்ை உண்டாகின்ற துக்கம். மனத்தின் போக்கில் சென்று மயலில் மூழ்கித் துவண்டு செயல் மறந்து இருப்பதற்கு அடிப்படையாக இருப்பது மாயா விஆளயாட்டு. இந்த மாயா விநோதத்தில்ை வந்த துக்கம் மாய வேண்டும். மாயை விளையாட்டு மாய்வதற்கு ஞான விளையாட்டுத்தான் மருந்து. அதற்கு உன்னுடைய திருவருள் வேண்டும்' என்பது அ ரு ன கி ரிய πή. பிரார்த்தனே. - - >

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/46&oldid=575857" இலிருந்து மீள்விக்கப்பட்டது