பக்கம்:தனி வீடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விள்யாட்டு 37.

ஞானம் நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்?

"நீயான ஞான விநோதம்' என்ருர். முருகப் பெரு மான் ஞானமே திருவுருவாக இருப்பவன். ப்ரக்ஞானம், ப்ரம்மம்' என்பது மகாவாக்கியம். கடவுளை அறிவது என்ருலும் ஞானத்தை அறிவது என்ருலும் ஒன்றுதான். அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே” என்று திருப்புகழில் அருணகிரியார் அருளியிருக்கிரு.ர்.

ேேய அந்த ஞான மயமாக இருக்கிருய். நீ என் உள்ளத்தில் வந்துவிட்டால் என் மனம் ஞான வாசனை வீசும். அதிலிருந்து விளையும் விளையாட்டு ஞான விளயாட்டு ஆகிவிடும். அதனை நீ அருள் செய்யவேண்டும். நீ எப்போது அப்பா அருள்வதற்கு கினிேத்திருக்கிருய்?’. என்று அருணகிரியார் முருகப்பெருமானப் பார்த்துக் கேட்கிருர். r ... ." -

ஞானக் குழந்தை

சேயர்ன வேல் கந்தனே! - ‘. . . என்று முருகனே விளிக்கிருர். சேய் என்பதற்குச் சிவந்த நிறம் உடைய முருகன் என்று பொருள் கொள்ளலாம். ஆனல் இங்கே குழந்தை என்று பொருள் கொள்வது, சிறப்பாகும். விளையாட்டைச் சொல்லும்போது குழந்தை என்று சொல்வதுதான் பொருத்தம். ஞான விளையாடல் செய்கின்ற எம்பெருமான் நம்மையும் அந்த விளையாட்டில் குழந்தையாகக் கூட்டிக் கொள்வான். ஆகவே சேயான என்பதற்குக் குழந்தைத் தெய்வமாக நிலவுகின்ற என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். • - ஞான விளையாடலைச் செய்யும் அன்பர்களுக்கு எல்லாம் தலைவனகிய ஞானக் குழந்தை தன்னுடைய கையிலே அந்த விளையாட்டுக்குரிய கருவியை வைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/47&oldid=575858" இலிருந்து மீள்விக்கப்பட்டது