பக்கம்:தனி வீடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தனி வீடு

திருக்கிருன். பொல்லாத குழந்தை கையில் கத்தியையும்

கோலையும் வைத்திருக்கும். நல்ல குழந்தைகள் பந்தும்

பொம்மையும் வைத்திருக்கும். கல்லேயும் கத்தியையும்

கொண்ட அந்தக் குழந்தை திங்கு செய்யுமே என்று

பெரியவர்கள் அஞ்சுவார்கள். பந்தையும், பொம்மையை யும் உடைய குழந்தையைக் கண்டால் பிற குழந்தைகள், நாடி ஓடி விளையாட வருவார்கள். ஞான விநோதம் கடத்' தும் பெருமானகிய முருகன் தன்னுடைய அன்பர்களையும் ஞானத் திருவிளையாட்டில் பயிலும்படி அருள் பாலிப்

பான். அவன் தன்னுடைய கையில் ஞானத்தையே

வேலாக வைத்துக்கொண்டிருக்கிருன். - .

ஆறு முகமும் பன்னிரண்டு கரங்களும் உடைய இளங்

குழந்தையாகப் பார்வதி தேவியால் ஒன்றுபட்டபோது அவனுக்குக் கந்த்ன் என்ற திருநாமம் வந்தது. ஆகவே, கந்தன் என்ற பெயரும் அவனுடைய குழந்தைப் பிராயத்தை கினப்பூட்டுகிறது. அவன் குழந்தை; ஞான. விளையாட்டுக் குழந்தை; அதற்கு ஏற்ற ஞான வேலைத் திருக்கரத்தில் கொண்டிருக்கிருன் சரவணப் பூம்பொய் கையில் விளையாடும் குழங்தை என்ற கருத்துக்கள் கினேவுக்கு வரும்படியாக, . .

. சேயான வேல் கந்தனே! என்று பாடினர்.

அத்தகைய குழந்தை திருச்செந்துாரில் இருக்கிருளும். உயிர்கள் விளையாடும் இடத்திற்கு வந்து விளையாடு கின்ற குழந்தை அவன். ஏதோ கந்த லோகத்திலும். சரவணப்பூம் பொய்கையிலும் மாத்திரம் விளையாடிக் கொண்டிருந்தால் நாம் அவனோடு சேர்ந்து விளையாட இயலாது. அவனே மிகவும் கருணே உடைய குழந்தை யாதலின் நாம்-மாயா விளையாட்டு விளையாடுகிற உலகத் திற்கே வந்து திருச்செந்தூரில் இருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/48&oldid=575859" இலிருந்து மீள்விக்கப்பட்டது