பக்கம்:தனி வீடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 தனி வீடு

மனம் நம்புவது இல்லை. நமக்கு உறுதிப்பாடு இல்லாமல் ஐயம் பிறக்கிறது. இறைவன் இருக்கிருன். அவன் திரு வருள் செய்வான். அந்தத் திருவருளால் பேரின்பம் பெற லாம்” என்ற கருத்தை ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஆயிரக்கணக்காண பேர்கள் சொல்லி இருக்கிருர்கள். ஒரு சமயம் அல்ல, இரண்டு சமயம் அல்ல, எல்லாச் சமயங் களும் அதை வற்புறுத்திக் கூறுகின்றன. ஏதோ ஒரு காலத்தில் சொன்னர்கள் என்பதும் இல்லை. பல காலமாக இந்தக் கருத்தைப் பெரியவர்கள் சொல்லிக்கொண்டு வரு கிருர்கள். இப்போது உள்ளவர்களும் சொல்வதை நாம் நேரில் கேட்கிருேம். முன்னலே இருந்த பெரியவர்கள் தாம் இயற்றிய நூல்களில் சொல்லி இருக்கிரு.ர்கள் உலகத் திலுள்ள எல்லாப் பகுதிகளிலும் இறைவனுடைய திரு வருளில் ஈடுபட்டு, அதல்ைகிடைத்த இன்பத்தை நுகர்ந்து, நீங்களும் இத்தகைய இன்பத்தைப் பெறலாம் என்று சொன்ன பேரியவர்கள் பலர். இன்ன சாதி, இன்ன சமயம், இன்ன மொழி, இன்ன நாடு என்ற வரையறை இல்லாமல் எல்லா இடத்தும் அத்தகைய பெரியவர்கள் தோன்றியிருக் கிரு.ர்கள்; இன்னும் தோன்றுவார்கள்.

- இப்படிப் பலகாலமாகப் பல பெருமக்கள், பேரின்பத்

தைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தாலும், நமக்கு 'கம் பிக்கை உண்டாவது இல்லை. மதிப்பைக் கருதிப் பேச்சள் வில் நாம் கம்புவதாகக் காட்டுகிருேம். அப்படி ஒன்று இருக்குமா? நமக்குக் கிடைக்குமா?' என்ற ஐயமே 5ம் முடைய உள்ளத்தில் அலை வீசுகிறது. இதற்கு முக்கிய மான காரணம் என்ன? அதைத்தான் மாயை என்றும் திரோதம் என்றும் சொல்வார்கள்.

நாம் நுகர்கின்ற சிற்றின்பம் கை கண்டதாகத் தோற்றுகிறது. அந்த இன்பத்திற்கு வேண்டிய முயற்சி களேச் செய்யும்போதே பல சமயங்களில் அது கை கூடுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/56&oldid=575867" இலிருந்து மீள்விக்கப்பட்டது