பக்கம்:தனி வீடு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 53.

கொடுத்தால் அதை கட்டுப் பயிர் செய்யவும் செய்யலாம்; மாவாக அரைத்துப் பலகாரமும் செய்யலாம்; சுண்டலாக

வும் செய்து சாப்பிடலாம். அது போலவே கடவுளுடைய

படங்களே அழகுக்காக மாட்டி வைக்கலாம். எத்தனையோ பேர் இப்போது நடராஜ விக்கிரகங்களைக் கொண்டு வந்து

தம்முடைய அறையில் வைத்திருக்கிருர்கள்; காய்ப். பொம்மை, புலியின் பொம்மை, மனிதன் பொம்மை

முதலியவற்றைப் போலவே அதையும் வைத்திருக்கிருர்கள். கடலை விதையைச் சுண்டலாகச் சாப்பிடுவது போன்ற செயல் அது. அப்படி இல்லாமல் கடலேயை கட்டு வளர்த் * தால் ஒன்றுக்குப் பத்து மடங்கு விளேயும். நெல்லில்கூடச் சாப்பாட்டு நெல் என்றும், விதைநெல் என்றும் வேறு

பிரித்து வைக்கிருர்கள். விதைநெல் என்று சேமித்து வைத்திருந்தால் அதற்கு மதிப்பு அதிகம். குடியான

வனுக்கு அந்த கெல்லினிடத்தில் அதிக அன்பு இருக்கும்.

பஞ்சம் வந்தாலும் விதை நெல்லைச் சமையல் செய்து

சாப்பிடமாட்டான். விதையைச் சமையல் செய்ய முடி

யாது என்பது அல்ல; அதனல் விளகின்ற பெரும் பயன்

ஒன்று இருக்கவும், அதை விட்டு விட்டுச் சிறு பயனுக்காக

அதனை உபயோகப்படுத்தக் கூடாது என்ற கருத்து, வேளாளனுக்கு இருக்கிறது. விதையை கல்லபடி பயன்

படுத்திக் கொள்ளாதவன் அறிவிலி.

இறைவனுடைய திருக்கோயிலுக்குச் சென்று நாம் காணுகின்ற திருவுருவம் கண்ணுக்கு அழகாக இருக்கிற் தென்றும், அதுபோல 5ம் வீட்டில் ஒன்று வைத்துக் கொள்ளலாம் என்றும் கினைத்து அந்த அளவில் கிற்கிற வர்களைச் சிறந்த அறிவுடையவர்கள் என்று சொல்ல முடியாது. அக்தத் திருவுருவத்தை வித்தாகக் கொண்டு அன்பு நீர் பாய்ச்சிப் பல சாதனைகளால் உரமிட்டு இறைவ னுடைய திருவருட் கனி பழுக்கும்படி செய்வதுதான் நல்ல பயனப் பெறும் வழி. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/63&oldid=575874" இலிருந்து மீள்விக்கப்பட்டது