பக்கம்:தனி வீடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 57

அடையாளங்கள். இனி அருணகிரியார் சொல்வதைப் பார்க்கலாம். - - ... .

அந்தப் பரமானந்த சாகரம் எங்கே இருக்கிறது என் பதைச் சொல்கிரு.ர். . . . -

புத்திக் கமலம் செயல் மாண்டு அடங்கப் புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே. அருணகிரியார் சொல்லும் பரமானந்தக் கடல் மிக்க வியப்பானது. அது ஊற்ருகத் தோன்றிக் கடலாக விரிந்ததாம். மலையிலிருந்து உண்டாகும் ஊற்று வரவர ஆருக மாறுவதைக் காண்கிருேம். ஆனல் கடலிலே ஊற்று இருக்கிறதா என்பதை நாம் அறிய முடியாது. கடலிலே தண்ணிர் இருப்பதனால்தான் மற்ற இடங் களிலும் ஊற்றுப் புறப்படுகிறது என்று நிலநூல் வல்லார்கள் சொல்கிருர்கள். எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருக்கிற கடலுக்கு ஊற்று இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அருணகிரிநாதர் சொல்லுகிற பரமானந்தக் கடல் முதலில் ஒரு சிறிய ஊற்ருகப் புறப் பட்டது. மலையிலிருந்து ஒர் ஊற்றுக் கிளம்பிப் பின்பு சற்றே பெரிதாகிக் கால்வாய் ஆகி, அது பின்பு ஆறு ஆகி, அதுவே ஒர் இடத்தில் தங்கிப் பெரிய கடலாகிவிடுகிற தென்று வைத்துக் கொள்ளலாம்; அந்தக் கடலேப்போல அது இருக்கிறது.

  • - - ஊற்றும் கடலும் பரம iனந்தக் கடலின் மூல கற்று எங்கே புறப்பட் டது என்பதை அருணகிரிநாதர் சொல்கிருர், !

புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம்எற்றித் தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/67&oldid=575878" இலிருந்து மீள்விக்கப்பட்டது