பக்கம்:தனி வீடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தனி வீடு

புத்தியாகிய தாமரையிலிருந்து உருகிப் பெருகி இந்தக் கடல் விரிந்து நிற்கிறதாம்; உள்ளக் கமலத்தில் ஊற்று எடுக்கும் என்ருல், நமக்கும் உள்ளக் கமலம் இல்லையா? நம்முடைய உள்ளத்தில் அந்த ஊற்றுப் புறப்படக் கூடாதா? உள்ளக் கமலத்தில் ஊற்றுப் புறப்பட வேண்டு மால்ை அதற்குமுன் ஒன்று நிகழவேண்டும். நம்முடைய உள்ளக் கமலம் குவிந்திருக்கிறது. குவிந்த கமலத்தில் மணமும் இராது; தேனும் தோன்ருது.

தாமரை எப்போது குவிந்திருக்கும்? சூரியன் இல்லாத போது, இரவு நேரத்தில், இருட்டில் குவிந்திருக்கும். நாம் அஞ்ஞான அந்தகாரத்தில் வாழ்கிருேம். இந்த இருளில், கம்முடைய புத்தியாகிய கமலம் குவிந்திருக்கிறது. இது முதலில் திறக்க வேண்டும்; பின்பு உள்ளே இருந்து தேன் ஊற்றுக் கிளம்பும். கமலம் விரிய வேண்டுமானல் கதிரவன் வானத்தில் தோன்ற வேண்டும். கதிரவன் ஒளி பட்டாலன்றித் தாமரை மலராது. கம்முடைய உள்ள மாகிய கமலம், ஞான சூரியனுகிய முருகப் பெருமானுடைய அருள் பட்டால்தான் விரியும். பிரபஞ்சத்தின் கிழல் பட்டுப்பட்டுக் குவிந்திருக்கின்ற கமலம் ஆண்டவன் அருள் பட்டுப் பட்டு விரியும். .

r அக இருள்

காம் இருட்டில் விவகாரம் நடத்துகிருேம் கண்ணுக்குத் தோன்றுகின்ற இருட்டுத்தான் இருட்டு என்று கினேத்துக்கொள்ளக் கூடாது. அகக் கண் தெரி யாமல் செய்கிற அஞ்ஞானத்தைப் போன்ற போருள் வேறு இல்லே. நாமும் ஒரு வகையில் குருடர்களே. உலகம் முழுவதும் இருள் கிரம்பி இருக்கிறது. அதல்ை "மா இருள் ஞாலம்' என்று பெரியவர்கள் சொல்வார்கள். காம் வாழ்கிற வாழ்க்கை இருட்டு வாழ்க்கை. இருட்டுக் காரியம் திருட்டுக் காரியம். நாம் செய்கின்ற காரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/68&oldid=575879" இலிருந்து மீள்விக்கப்பட்டது