பக்கம்:தனி வீடு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 59

அத்தனேயும் திருடடுக் காரியங்களே. இறைவனுடைய

திருவருளாகிய் செல்வத்தைப் பெறுவதற்குரிய முயற்சி

கள் நேர்மையான காரியங்கள். அப்படி அல்லாதன யாவும் அஞ்ஞான இருளில் செய்கிற திருட்டுக் காரியங்களே.

கமலம் விரிதல்

இருட்டிலும் ஒளி இருக்குமானல் பல காரியங்களைச் செய்யலாம். ஆனல் தாமரை மலராது. இரவு நேரத்தில் மின்சார விளக்குப் போட்டுக் கொண்டு வேலை செய் கிருேம். நிலா, அக்கினி முதலியவை வந்து ஒளி வீசினனும் தாமரை மலராது. அது போலவே சூரியன் முதலிய பெரிய ஒளிகள் ஒளியை வீசினலும் நமக்கு, அக இருட்டுப் போகாது. அந்த இருட்டைப் போக்குவதற்கு ஞான பானுவாகிய முருகப் பெருமானுடைய திருவருட் கதிர் வீச வேண்டும். . . . . .

இறைவன் திருவருள் ஒளியிலே அடியார்களின் உள் ளக் கமலங்கள் மலரும்; உள் ளத்தில் இருக்கிற க ட்டுப் போய்விடும். -

இப்போது சில சமயங்களில் நமக்கு இறைவனுடைய நினைவு மின்னல்போல வருகிறது. அவன் திருவருளேச் சில் சமயம் நினைக்கிருேம். மின்னல் கீற்றைச் சூரிய ஒளி ஆக்கிக்கொள்ள முடியுமா? சில சமயம் எம்பெருமான கினைத்து ஒரு துளி கண்ணிர் விடுகிருேம். கொஞ்சம் மனத்தில் அமைதி பெறுகிருேம். இந்த அமைதிதான் அருணகிரியார் சொல்கிற இன்பம் என்று கினைத்து ஏமாந்து போகக் கூடாது. - . . . . . . . . . .

இறைவனுடைய திருவருள் ஒளி உள்ளக் கமலத்தில் படவேண்டுமானல் நாம் அந்தப் பெருமான நினைத்து நம்முடைய செயல் ஒன்றும் இல்லை என்று இருக்க வேண்டும். நான், எனது என்ற கட்டை விட்டுவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/69&oldid=575880" இலிருந்து மீள்விக்கப்பட்டது