பக்கம்:தனி வீடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ{) தனி வீடு

நான் செய்கிறேன்’ என்று கினைப்பதை விட்டுவிட்டால் இறைவனுடைய அருள் ஒளி பாயும். செயல் மாண்டு அடங்கத் தொடங்கில்ை உள்ளக் கமலம் மலர்ந்து அதிலிருந்து இன்ப ஊற்றுப் புறப்படும்.

- சுகத்துக்குக் காரணம்

செயல் இல்லாமல் இருப்பது சுகத்தைத் தரும்: நன்ஞ்கத் துாங்குபவர்கள், 6 நான் சுகமாகத் துரங்கினேன்' என்று சொல்வார்கள். கையும் காலும் அசையாமல் தூங்கிலுைம் தூக்கத்தில் சொப்பனம் கண்டால் அது கல்ல தாக்கம் ஆகாது. தூக்கத்தில் பிதற்றுபவர்கள் இருக்கிரு.ர்கள். சிலர் சொற்பொழிவு கூடச் செய்வார்கள். துர்க்கத்தில் எழுந்து நடமாடுகிற வியாதி ஒன்று உண்டு. -sysog “Gavrih@ibus estavlò’ (Somnombolism) greir@ சொல்வார்கள். கையும் காலும் அசையாமல் படுத்துக் கொண்டுவிட்டால். செயல் அடங்கிப் படுத்திருக்கிருன்' என்று சொல்வதற்கு இல்லை. ம்னம் வேலை செய்யாமல் அடங்கி நின்ருல் அப்போது ஒரு வகையான சுகம் உண்டா கிறது. நாம் தூக்கத்தில் செயல் இழந்திருக்கும்போது இந்த இன்பம் உண்டாகிறது என்பதைப் பிரத்தியட்சத்தில் பார்க்கிருேம். அது போலவே உண்மையாக எல்லாச் செயல்களும் அடங்கி மனம் அலேயாமல் இருந்தால் அவனுக்கு இன்பம் தோன்றுகிறது. -

நாம் இப்போது இருக்கிற விழிப்பு நிலைக்குச் சாக்கிரா வஸ்தை என்று பெயர் படுத்துக் கொண்டு தாங்கும் போது கனவு காண்கிருேம். இது சொப்பவைஸ்வதை. கனவு காணுமல் இருக்கும் கிலே சுழுத்தி அவஸ்தை. அந்தச் சுழுத்திதான் இன்பத்தைத் தருவது. கையையும் காலையும் அசைத்து வெளியில் நடமாடுவதைவிடப் படுத்துக் கொண்டிருப்பது கொஞ்சம் சுகத்தைத் தரும். படுத்துக் கொண்டிருப்பதிலும் கொஞ்சம் கண்ணே மூடிக் கொண்டு தாங்கில்ை அப்போது உண்டாகும் சுகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/70&oldid=575881" இலிருந்து மீள்விக்கப்பட்டது