பக்கம்:தனி வீடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் *. § {

அதிகம். அதிலும் கனவு இல்லாமல் துரங்கினல் அந்தச் சுகம் மிகவும் அதிகம்.

இளைப்பாறுதல் என்று சொல்வதற்கே செயல் இல்லா மல் இருத்தல் என்று பொருள். தினந்தோறும் காரியா லயம் சென்று உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக் கிருேம். அந்தச் செயலை விட்டுவிட்டு ஒய்வு பெறவேண்டு மென்பது நம்முடைய ஆசை. மற்றவர்களேவிடத் தொழி லாளர்கள் தாம் எப்போது விட்டுக்குப் போவோம் என்று கினைத்துக் கொண்டிருக்கிருள்கள். ஒவ்வொரு நாளும் காரி யாலயம் விடுகிற நேரத்தையே தொழிலாளி எதிர்பார்க் கிருன். காமும் எதிர்பார்க்கிருேம். ஒரு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை எப்போது வருகிறதென்று பார்க் கிருேம். இவ்வாறு எதிர்பார்ப்பதற்குக் காரணம் அந்த வேகள்களிலும், அந்த நாட்களிலும் சும்மா இருக்கலாம் என்பதுதான். தினந்தோறும் செய்கின்ற காரியத்தை விட்டுவிட்டு ஓய்வாக இருப்பத்ை நாம் சும்மா இருப்பது என்று சொல்கிருேம். ஒரு நாளேக்குச் சும்மா இருக்க நமக்கு இரவு கிடைத்திருக்கிறது. ஒரு வாரத்திற்குச் சும்மா இருக்க ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு வருஷத் தின் முடிவில் கோடை விடுமுறை கிடைக்கிறது. இடை. யிலும் சில் விடுமுறைகள் உண்டு. அப்பொழுதெல்லாம் வழக்கமாகச் செய்கிற வேலைகள் விட்டுவிட்டுச் சும்மா இருக்கிருர்கள். அப்படி இருப்பதால் ஏதோசுகம் இருப்பு. தாக அவர்கள் கினேக்கிருர்கள். .

மனிதனுக்கு இரவில் தாக்கத்தைக் கொடுத்திருப்பது உடம்பின் அலுப்பைப் போக்கிக் கொள்வதற்காக. மனம் கூட அப்போது தாங்குகிறது. எதைஎதையோ கினேந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/71&oldid=575882" இலிருந்து மீள்விக்கப்பட்டது