பக்கம்:தனி வீடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தனி வீடு

கவலைப்பட்டுக் கொண்டிருப்பவனும், யார் யாரிடமோ பகை உணர்ச்சி கொண்டவனும் தூங்கும்போது அந்த கிலே மாறி ஓய்வு எடுத்துக்கொள்கிருன். அமைதியையும் இன்பத்தையும் அவன் அப்போது அநுபவிக்கிருன். உடம்பு மாத்திரம் கட்டை மாதிரி இருந்தால் போதாது. மனம் துரங்க வேண்டும். அதுதான் செயல் அற்ற கிலே என்பது. * - - - -

யாருக்கு மனத்தில் கவலை இல்லையோ, யார் நல்ல முறையில் உள்ளவர்களோ அவர்கள் உடம்பு தூங்கும்; உள்ளமும் தூங்கும். குழந்தை நன்ருகத் தூங்குகிறது. அதனுடைய உள்ளத்தில் மாசு இல்லை. மற்ற எல்லோரை யும்விடக் குழந்தைக்கு அதிக நேரம் தூக்கம் கிடைக்கிறது அப்படித் துரங்குவதற்கு உரிமையும் ஆற்றலும் அதற்கு உண்டு. தூங்கி எழுந்தவுடன் அது மிக்க மலர்ச்சியோடு இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் இருந்த தொல்லே எல்லாம் நீங்கி ஓய்வு பெற்றுத் தாங்கும்போது அது வளர் கிறது. அதல்ைதான் தமிழில் தூங்குதல் என்ற பொருளில் வளருதல் என்ற சொல் வழங்குகிறது. - -

நாமும் குழந்தைபோல இருந்தால் தூக்கத்தை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது கூட முதல்நாள் உழைத்துவிட்டு இரவு தூங்கிைேமானல் மறு நாள் எழும்போது சுறுசுறுப்பாய் இருக்கிறது. முதல் நாள் கினைத்த நினைப்புக்களே மாற்றிக்கொண்டு, கவலைப் படாமல் தாங்கிவிட்டால், மறுநாள் ஒரு பங்குக்கு இரு பங்கு வேலை செய்ய முடிகிறது. இப்படிச் சாதாரண வாழ்க்கையில் இருக்கிறவன் ஒழுங்காக வேலை செய்து ஒய்வு எடுத்துக் கொண்டு சும்மா இருந்தாலும் தாங்கி குலும் அதற்குப் பிறகு நல்ல சுறுசுறுப்பும் இன்பமும் உண்டாகின்றன என்பதைப் பார்க்கிருேம். உண்மை யாகவே, எல்லாச் செயலும் ஒழிந்து, நினைவு ஒழிந்திருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/72&oldid=575883" இலிருந்து மீள்விக்கப்பட்டது