பக்கம்:தனி வீடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 . தனி வீடு

கொண்டு அவர்கள் பிரயாணம் செய்கிரு.ர்கள், வண்டி யில் ஒருவன் போகிருன் காலால் நடக்கிறவனும் பிர பாணம் செய்கிருன். இரண்டு பேரும் குறிப்பிட்ட ஒரே ஊருக்குப் போகிருர்கள். ஆனல் கடந்தவனுக்குப் பயணத்தில்ை உண்டாண அலுப்பு இருக்கும். வண்டி யிலே உட்கார்ந்தவனுக்கு அந்தத் துன்பம் இல்லை. அவன் எத்தனே தாரத்தைத் கடந்து சென்ருலும் தன்னுடைய செயலால் கடக்கவில்லை. ஆகவே அவனுக்குப் பயணத் தில்ை உண்டாகிற துன்பம் இராது. -

இறைவனுடைய திருவருளே ஆகாரமாகக் கொண்டு தம்முடைய செயலே இழந்தவர்கள் தோற்றத்தில் பல காரியங்களேச் செய்கிறவர்களைப் போல இருந்தாலும் அவர்கள் செய்யாதவர்களே. அவர்கள் அடைவது இன்பங்' தான். கட்டை வண்டியிலும் குதிரை வண்டியிலும் செல் கிறவர்கள், நடந்து செல்கிறவர்களைப் போல நெடுங் தூரம் சென்ருலும் துன்பம் இராது. ரெயிலில் போகிறவர் களிலும் மூன்ரும் வகுப்பில் போகிறவர்கள் தாங்குவது இல்லை. ஒருக்ால் தாங்க முயன்ருலும் கன்ருகத் துரங்க முடியாது. முதல் வகுப்பில் போனவர்களோ ஏறினவுடன் படுத்துக் கொள்கிருர்கள். இறங்குகிற இடம் வந்தால் விழித்துக் கொள்கிஞ்ர்கள். தம்முடைய வீட்டிலே மெத் தையில் படுத்துத் துரங்குவதுபோல அவர்கள் வண்டியி லும் தூங்குகிருர்கள், அப்படியே இந்த உலகப் பிரயாணத் தில் எம்பெருமானுடைய திருவருளில் ஈடுபட்டுப் பசு கரணங்கள் எல்லாம் மாறிப் பதிகரணங்களாகப் பெற்ற வர்கள் ஜீவயாத்திரையில் மற்றவர்களைப் போலவே தோற்றினாலும் அவர்கள் மோட்ச வீட்டில் இருந்து இன் பத்தைப் பெறுபவர்களாகவே நிற்கிருர்கள். ஆல்ை அதற்கும் இதற்கும் ஒரே ஒரு வேறுபாடு. இங்கே சரீரம் இருக்கிறது; அங்கே சரீரம் இல்லை. அதனுல் இந்த கிலேக்கு ஜீவன் முத்தி நிலை என்று பெயர் தந்திருக்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/74&oldid=575885" இலிருந்து மீள்விக்கப்பட்டது