பக்கம்:தனி வீடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 65

ஜி வன் முக்தன் பரமானந்தக் கடலிலே துளையம் ஆடுவான். அவனுக்கு அப்போது செயல் என்பது ஒன்றும் இல்லை; செயல்கள் குறைந்து கொண்டு வரவர உள்ளக் கமலம் விரிந்துவரும். இறைவனுடைய திருவருள் இன்பம் மெல்ல மெல்லத் தலைப்படும்; புத்திக் கமலத்தில் உருக்கம், உண்டாகி ஆனந்த ஊற்று எழும் என்று அருணகிரி நாதர் சொல்கிருர். . -

அறிவும் அருளும்

பொதுவாக மனம் என்பது அந்தக்கரணம் என்ற பெயரால் குறிக்கப்படும். அந்தக்கரணம் நான்கு பகுதி யாக அமைந்தது. முன்பும் இது பற்றிச் சொல்லியிருக் கிறேன். மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்பனவே அவை. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி ஆசைப்படுவது. மனம். எப்போதும் நம்முடைய உணர்வோடு இருப்பது அகங்காரம். ஒன்றைக் கடைப்பிடித்துத் திண்ணமாக இருப்பது சித்தம். இது இத்தகையது என்று வேறு. பிரித்துப் பார்ப்பது புத்தி. மனம் நல்லதாக இருந்தால் சித்தப் பகுதி வன்மை பெறும். அதைத்தான் :w 1, Power: என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நல்லது இன்னது என்று புத்தியினல் தெரிந்துகொண்டு அதனிடத்தில் நிலைத்து நிற்கச் சித்தம் உதவும்

அறிவு விகாசம் அடைவதைப் புத்திக் கமலம் விரிவ. தாகச் சொல்லலாம். அறியாம்ை என்னும் இருள்: போனல் அறிவு மலரும் அறிவு மலர்ந்தால் ஆனந்த ஊற்று அங்கிருந்து எழும்.

இங்கே அறிவு என்று சொல்வது, வெறும் பொருளை உணர்கிற அறிவு அன்று. ஞானம் என்ற பெயரால் நம் முடைய பெரியோர்கள் குறிப்பிட்டது இறைவனுடைய திருவருள் இன்ப அதுபவத்தைப் பெறுவதற்குக் காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/75&oldid=575886" இலிருந்து மீள்விக்கப்பட்டது