பக்கம்:தனி வீடு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - தனி வீடு

திறல் உடையவன் முருகன். இந்த வீரச் செயலை ஒரு திரு முகம் செய்கின்றது. - . . . . -г. ஒருமுகம்

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமோடு களம்வேட் டன்றே."

மகிழும் முகம்

இனி ஆளுவது முகம் இன்பத்தை வழங்குகின்றது. ஆன்மாக்களுடைய பிரதிநிதியாக இருக்கின்ற வள்ளி யெம் பெருமாட்டிக்கு எம்பெருமான் இன்பம் வழங்கினன். அந்தச் செயலைச் செய்வது ஒரு முகம். -

. . - 'ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் - - மடவரல் வள்ளியொடு நகை அமர்ந் தன்றே.'

முருகன் இருளைப் போக்கி ஒளிகாட்டுவான் என்றும், உலகத்திற்குப் பொதுவாக ஒளி கொடுத்தாலும், சிறப் பாகத் தன்னே அண்டி அன்பு செய்வோருக்கு இன்பம் தரு வான் என்றும், உலகத்தில் பிறருக்கு நலம் செய்கின்ற மக்களைக் காப்பாற்றுவான் என்றும், அறியாமையை நீக்கு வான் என்றும், தீங்கு விளைவிப்பவர்களை அடக்குவான் என்றும், ஆன்மாக்களுக்கு இன்பம் தருவான் என்றும் கொள்ளும்படியாக இந்த முகங்களின் செயல்கள் அமைந் திருக்கின்றன. ஒளி படைத்த உலகத்தில் அன்பர்கள் வந்து அவனே வழிபட்டுத் தமக்கு வேண்டிய வரங்களைப் பெற, ஒருபால் அந்தணர்கள் வேள்வியைச் செய்ய, பின்னும் ஒருபால் ஞானிகள் உபதேசம் பெற, வேறு ஒரு பால் அசுரர்கள் ஒழிய, பின்னும் ஒருபால் வள்ளி யெம் பெரும்ாட்டி இன்பத்தைப் பெறுகிருள்

இந்த ஆறு முகங்களையும் வரிசையாகப் பெற்றிருக் கிருன் முருகன். நக்கீரர் சொல்கின்ற முறையில் அழகான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/92&oldid=575903" இலிருந்து மீள்விக்கப்பட்டது