பக்கம்:தனி வீடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 87

உருட்டும்; அழகுப் பொருள்களையும் உருட்டும். எங்கெங்கே தேன் உண்டோ அங்கெல்லாம் நாடிச் சென்று. மலர்களைக் கண்டு தேனைத் தொகுப்பதே வண்டினுடைய வாழ்வு. சோமசுந்தரக் கடவுள் பாடியதாக உள்ள ஒரு பாடடில. -

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" என்று வருகிறது. கொங்கு - தேன். அழகிய சிறகைப் பெற்ற வண்டு எங்கே தேன் உள்ளது என்று தேடிப் பறந்து திரியும் இயல்பு உடையது. அப்படித் தேடித் தொகுத்த தேனைத் தான் உண்பதோடு அன்றி உலகமே உண்ணும்படி கொடுக்கிறது. இறைவனுக்கும் அபிஷேகம் செய்ய அத்தேன் உதவுகிறது. - . . . .

மனமும் வண்டும்

தேனத் தொகுக்கும் வண்டைப்போல நல்ல எண் ணங்களைத் தொகுத்து வைத்திருக்கும் மனம் சிலருக்கு உண்டு. ஆனல் பெரும்பாலாருடைய மனம் உயர்ந்த தேனே நாடாமல் பிறரால் கழிக்கப்படும் பொருள்களே உருட்டுகின்ற வண்டைப்போல இருக்கின்றன. தாமரை யில் உள்ள தேனைத் தொகுக்கும் வண்டைச் சிறந்த வண் டாகக் கொள்வது இயல்பு. மிகச் சிறந்தவர்களுடைய மனம் தண்டாமரைத் தேனைத் தொகுக்கும் வண்டைப் போன்றது. மனத்திற்கு வண்டை உவமையாகச் சொல் வது மரபு. மனம் வண்டானல் அது சென்று தேனைச் சேகரிக்கும் தாமரை ஒன்று இருக்கவேண்டும். அந்தத் தாமரையைத்தான் அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் சொல்கிரு.ர்.

திருவடித் தாமரை

இறைவனுடைய திருவடியைத் தாமரை போன்றது என்று சொல்வார்கள். பாதாம்புயம், பாதபத்மம் எனறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/97&oldid=575908" இலிருந்து மீள்விக்கப்பட்டது