பக்கம்:தனி வீடு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தனி வீடு

மிக உயர்ந்த மரங்களில் மலையின்மேல் தேன்கூடு கட்டும் வண்டுகள் இருக்கின்றன. பிறருடைய கையும் கண்ணும் படாமல் தேனே வைக்கவேண்டுமென்பது அந்த வண்டு களின் நோக்கம் போலும். நாம் உண்னுகிற பொருள். பிறருடைய கையும் கண்னும் படாமல் இருந்தால் நல்லது என்று பெரியவர்கள் சொல்வார்கள். பிறர் காணுமல் உண்ணுவதும், பிறர் கை படாமல் உண்ணு வதும் துய்மைக்கு அடையாளம் என்று பழைய காலத்து ஆசார சீலர்கள் கருதினர்கள். இப்போது கண்படாமல் உண்ணுவதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனல் கம்முடைய கை படாமலேயே சாப்பிட வேண்டுமென்று கரண்டி முதலியவைகளே ங்ாகரிக மக்கள் பயன்படுத்துகிருர்கள். உயர்ந்த வகையிலுள்ள வண்டும் பிறருடைய கைக்கு எட்டாதபடி, பிறருடைய கண் படாதபடி, மலேயின் உச்சியின்மேல் இருக்கும் மரக் கொம்புகளில் தேனைச் சேகரித்து வைக்கின்றது. அத்தகைய வண்டுக்குத் தும்பி என்று பெயர். தும்பிகளுக்குள் சிறந்த தும்பியைக் கோத்தும்பி என்று சொல்வார்கள். மரத்தின் உயர்ந்த கொம்பில் தேனை வைப்பதால் கோல்தும்பி என்று ச்ொல் வதும் உண்டு. தாமரையில் உள்ள தாதை ஊதி அதி லுள்ள தேனேக் கொண்டுபோய் மலையின்மேல் இருக்கும் சந்தன மரத்தில் அடை வைக்கும் வண்டு ஒன்றைப்பற்றி நற்றிணை என்ற சங்ககாலத்து நூல் பேசுகிறது.

  • தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீக்தேன் போல.'

இவ்வாறு வண்டுகளில் அழுக்கை உருட்டும் வண்டு, மலரில் உள்ள சிறு தேனைத் தொகுத்துக் கீழே அடை வக்கும் வண்டு, உயர்ந்த மரத்தில் தேன் கூடு கட்டும் ாடு, மலையின் மேலே அடை வைக்கும் வண்டு என்று: வகைகளைப் பார்க்கிருேம். மனிதர்களுடைய மனம் வண்டு போன்றது. வண்டுகளில் சில சாதி உண்டு. மனங்களிலோ பல பல சாதி உண்டு. இந்த மனம் அழுக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/96&oldid=575907" இலிருந்து மீள்விக்கப்பட்டது