பக்கம்:தன்னுணர்வு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16

நிறைந்த ஒருவனை நம் காலத்தில் பார்ப்பது அருமையினும் அருமையாகவிருக்கின்றது. இந்நிலையில் இப்பொழுதுள்ள வாழ்க்கையையும், மனபதையின் போக்கையும், முற்றிலும் திசைதிருப்பி நல்வழிக்கு இட்டுச் செல்லும் உண்மையான ஆடவரும் பெண்டிரும் ஏராளமாக வேண்டியிருக்கின்றனர். ஆனால் இங்குள்ள வாழ்க்கைக் குறைபாடுகளைக் கூடத் தாங்களே போக்கிக்கொள்ளத் திறமையற்றவர்களாக விருக்கின்றனர். அவர்தம் திறமையின் எல்லைக்கு மீறியதாக விருக்கின்றது அன்னவரின் விருப்பம். மாந்தர் ஒருவர்க் கொருவர் ஒருவரைச் சார்ந்துகொண்டும் ஒருவர்.பால் ஒருவர் கையேந்திக் கொண்டுமே உள்ளனர். நமது குடும்ப அமைப்பில் பெருமையில்லை? நம் கல்வி, தொழில், திருமணம், கொள்கை முதலிய எதையும் நாம் வரையறுத்துக் கொள்வதில்லை. வலிந்த சிலரே அவற்றை வரையறுக்கின்றனர். நாமெல்லாம் சமையலறைக் காவலர்கள் ஆகிவிட்டோம். சூழ்நிலையை எதிர்த்துப் போகும் ஆற்றல் நமக்கில்லை.

தாம் தொடும் முதல் செயலில் தோல்வி ஏற்படுமாயின் இளைஞர்கள் சோர்ந்து போகின்றனர். வாணிகன் தொடக்கத்தில் வரும் இழப்போடு தன்னம்பிக்கையையும் இழந்து விடுகின்றான். பள்ளிப் படிப்பையோ கல்லூரிப் படிப்பையோ முடித்த ஓராண்டிற்குள் ஏதாவதொரு வேலை கிடைக்காவிட்டால் தன்னைப் பெரிய படிப்பாளி என்று நினைத்துக்கொண்டிருப்பவன், நிலை குன்றிப் போய் விடுகிறான். தான் ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லையே என்ற நாணம் அவனுக்கு இருப்பதில்லை

ஈண்டுள்ளதைவிட மிகுதியான மன ஈடுபாடு மட்டும் இம் மாந்தர்க்கு ஏற்படுமானால் உலகில் அறம், கல்வி, தொழில் முதலிய வாழ்க்கைக் கூறுபாடுகளிலும் அவற்றைக் கைக்கொள்ளும் முறைகளிலும் ஒரு பெரிய தெளிவு ஏற்பட்டு விடும் என்பதை அறிய வேண்டும்

மாந்தன் எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/28&oldid=1162302" இலிருந்து மீள்விக்கப்பட்டது