பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழகக் குறுநில வேந்தர்

கொங்கிற் குடகர் என்றால் அடியார்க்கு நல்லார் கருத்து நன்கு பொருந்தும். அங்ஙனமல்லாது. குடகக் கொங்கர் என்றலாற் குடகப் புறத்தும் கொங்கர் என்ற பெயரையேயுடையர் என்று தெளிய நிற்றல் காண்க. ஆஅய் என்னும் வேளிர் வேந்தன் கொங்கரைக் குட கட லோட்டிய செய்தி,

“கொங்கர்க் குடகட லோட்டிய ஞான்றை”

(புறம், 130)

என்பதனால் அறியப்படுதலால் இதனுண்மை எளிதினுணரலாம். செங்கட்டுவன் கொங்கிற்கோயில் எடுத்தது கண்டு, கொங்கராய்க் குடகிலுள்ளாராகிய கோசரும், தாங்கள் தங்கியுள்ள குடமலை நாடுகளிலே கண்ணகிக்கு விழாவுஞ் சாந்தியுஞ் செய்ய விழைந்தனர் என்பதே இயைபுடைத்தாமென்க. இதுவே அரும் பதவுரைகாரர் கருத்தென்பது, அவர் சிலப்பதிகார வேட்டுவவரியில் கொங்கச் செல்வி குடமலை யாட்டி” என வருமிடத்து! “மேற்பட்டு இவளைத் தெய்வமாகக் கொண்டாடுமிடம் கூறினபடியாலே இவள் துர்க்கையாகவே பிறந்தனள் என்றவாறு.” என விளக்கிய வாற்றானுணரலாகும்.

இவருரையாற் கண்ணகியைத் தெய்வமாகக் கொண்டாடிய இடம் கொங்குங் குடமலையுமாதல் எளிதிலறியலாம். இவர் கருத்துப்படி நோக்கிற் கொங்கிளங் கோசர் என்பாரைக் குடகக் கொங்கர் என வரந்தரு காதையில் விளக்கியதனால், கொங்கினின்று குடகப் புறத்துக் குடியேறிய இளங்கோசரென்பதே திரண்ட பொருளாகுமென்ப. இதனாற் கொங்கிளங் கோசர் தங்கணாட்டக மென்பது இளங் காசர் கொங்கினின்று போய்த் தங்கிய குடமலை நாட்டகம் என்றவாறாம். இவற்றாற் கோசர் முதலிற் சொங்கில் வதிதவறென்றும், பின்னர்க் குடகடற் பக்கத்து மலை நாட்டிற் குடியேறியவரென்றும் துணியப்-