பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. இராகவய்யங்கார்

65


பெயர் பெறாரென்க. இனி இக்கோசருட்டலை சிறந்து புலவர் பாடற் குரியராகிய சிலர் நன்மக்களைப் பற்றிச்சிறிது கூறுவேன்.

“பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப்
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும் பெயர் மாறன் றலைவனாகக்
கடந்தடு வாய்வா ளிளம்பல் கோசர்
இளளெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
பொலம் பூணைவ ருட்படப் புகழ்ந்த
மறமிகு சிறப்பிற் குறுநில மன்னர்
அவரும் பிறருந் துவன்றிப்
பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந்தேத்த
மகிழ்ந்தினி துறைமதி பெரும்” (மதுரைக் 770-79)

என வாழத்துதல் காணலாம். இதன்கண் “பொய்யா நல்லிசை நிறுத்த மாறன் றலைவனாகக் கடந்தடுவாய் வாளிளம்பல் கோசர்” எனக் கூறியதனால் இம்மாறன் வாய் மொழிக் கோசர் தலைவன் என்று துணியப்படும்.

பொய்யா நல்லிசை நிறுத்த மாறனென்பது “வாய் மொழி நிலை இய சேண் விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் (அகம். 205) என்ற கேரசர் வாய்மைச் சிறப்பொடு பொருந்த நிற்பது கண்டு கொள்க. நச்சினார்க்கினியர் ஈண்டு ஒருபடியாகத் துணியாமல் “மாறன் இவன் குடியிலுள்ள பாண்டியன்; அன்றி ஒரு குறுநில மன்னன் என்றலுமொன்று” என வுரைத்தது நோக்குக.

மாறன் றலைவனாகக் கடந்தடு கோசர் என்ற தொடர், மாறன் என்பவன், தமக்குத் தலைவனாகச் சென்று அடுகின்ற கோசர் எனப் பொருள்பட நிற்றலான் இம்மாறன் ஓர் குறுநில மன்னனாகிய கோசன் என்றே