பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

741 தமிழகக் குறுநில வேந்தர் கண்டது. அமராவதியில் ஒரு துாணிற் பொறித்த பல்லவ சாசனப் பகுதியில் (No. 32 Vol. ) அசுவத்தாமன் மதனி என்னும் அப்ஸரஸ்ஸை மணக்க அவள் அசோக மரத்தின் பல்ல்வங்கட்கிடை மகவினையின்றபோது அம்மகவைப் பல்லவத் தொட்டிலிற் கண்டு, பல்லவன் என்று அசுவத் தாமன் பெயரிட, அக்குழவி பல்லவன் என வழங்கப்பட்ட தென்று கூறுதலானும் பலலவன் திரைதரு மரபின் உண்டாதல் அறியலாம்.

   இவற்றாற் பல்லவர் தம்மைப் பாரத்வாஜ கோத்திரத் தினர் என்று கூறிக்கொண்டே ராஜ பரம்பரையின ராகவுங் கூறுதற்குக் காரணம் இனிது தெளியலாம். பாரத்வாஜ கோத்திரத்துத் தோன்றி அஹிச்சத்ர நாடாண்டதனால் இருகுலப் பெயரும் புனைந்தனராவர். பிற்கால சாசனங்கள் இவரைப் பிரம 

ஷித்திரிய குல மென்று கூறுவது கேட்டுணர்க. இப் பல்லவர் சாசனங் களில் இவர் பரம்பரையினர் பலர்க்கும் இறப்ப முன்வைத் துள்ள விமலனுக்கு அடுத்து வந்துள்ள கொண்கணிகள் என்னும் பெயர் கடற்றிரையின் வழியினன் என்பதை வலி யுறுத்துவது தெரியலாம்.

   அணிகன்-அர்ணிகன், கொண்கு அணிகன்-கடற் சேர்ப்பில் நீரலையிற்றோன்றிய மரபினன் என்பதாம். அர்னிகன் என்பதே அணிகன் என மரீஇ யினதாகும். அர்ணம்-அலைநீர், மலையா நாட்டில் இப் பல்லவ மரபின ரென்று துணியப்பட்ட அரசர் சாசனங்களில் கொண் குலகர்' என்றும் கவுரவார்ணத்யுதி எனவும் வரும் பெயர் களும் இக்கருத்தையே வலியுறுத்தும். கொண்துங்கன் என்பது கடலிற்றோன்றிய சிறப்பினன் என்னும் பொருள தாம். கொண் என்பது கடற்குப் பெயரென்பது கடற் கானத்தைக் கொண்கானம் என்பதனால் உணரலாம். கொண்கன் கடற் சேர்ப்பன் ஆதலும் தெரிக.

                   மகா பாரதம். ஆதி பர்வம்.