பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 தமிழகக் குறுநில வேந்தர்

   "கொண்டியுண்டித் தொண்டையோர் மருக" எனப் பெரும்பாணாற்றிலும் குடிப்பெயராகவே கொள்ளக் கிடத்தலுங் கண்டுணர்க. பாரதப் பழைய வுரைகாரர். துரோணர் பிறந்த "துரோணியை" மலைக் குகை யென்று கூறுவர். (ஆதிபர்வம் 64-ஆம் அத்.) பல்லவர் மலைகளிற் குகை தோண்டுதற்கு இஃது இயைபுடையதாகும். இதனானும் இக்குடித் தலைவன் துரோணன் ஆதல் உணரலாம்.
  பல்லவர் மலைக் குகையுடையர் (பாரதம். பீஷ்ம. 9) என்ற நூல் வழக்குங் காண்க. இவர் கிருஷ்ணவேணி நதிக்கரையில் வதித போது தம்மூரை த்ரோணி கோட்டை யென்று பெயரிட்டது பின்னர்த் தரணி கோட்டை யென மாறிற்றென்று நினையலாம். இவர் சாசனங்களிற் காணப்படும், இவற்றிற்கேற்பவே வடநாட்டு வழக்குற்ற பைதிலி மொழியில் "துரோண" என்னும் பதம் "தொண்ட" என மருவுவது உண்டென்பது துரோன காகம் தொண்ட காகம் என்று வருதலான் அறியப்படுவது. துரோணம் என்பது காக்கைக்குப் பெயரென்பது'
  "சிம்புட் பறவையும் வில்லுங் 
                          காக்கை
   தும்பையும் பதக்குந் 
                  துரோணமாகும்"
                  (பிங்கலம் 9380) என வருதலானறியலாம்.
   இனி பரத்வாஜருக்குத் தம் தரும பத்தினியிடம் உண் டானவர் அக்னிவேசயர் எனப்படுவர். அந்த ரிஷிக்கே க்ருதாசி யென்னும் நீரா மகளிடம் உண்டாயினவர் துரோணர். அக்னிவேச்யரும் துரோணரும் ஒரு தந்தை மக்கள் ஆதலால் இவர்கள் சகோதரர் ஆவர். இவ்வுண்மை மகா பாரதத்தில் (ஆதிபர். 140 ஆம் அத்யாயம்) பாரத் வாஜர் அந்த ஆக்னே யாஸ்திரத்தை அக்னிவேச்யருக்குக் கொடுத்தார்; அந்த அக்னிவேச்ய முனிவர் பாரத்வாஜ புத்திரரும் தமக்குச் சகோதரருமாக இருக்கும் துரோண