பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

களிலும் நிறைய உள்ளன. காட்டில் ஏற்பட்ட ஒரு கொடிய நோயினால் இவை தாக்கப்பட்டுப் பெரும் பகுதி அழிவுற்றன. இப்போது நீலகிரிப் பீடபூமியில் இவைகள் இல்லை என்றே சொல்லலாம்.

காட்டுப் பன்றி :

நீலகிரி மலையில் வாழும் பன்றிகள் கொழுத்துப் பருத்து முரட்டுத்தனத்தோடு திரியும். இவை பயிர்களை அடிக்கடி அழிப்பதால், இவைகளை எவ்விடத்திலும் கொல்லுவதற்கனுமதி யுண்டு. வேட்டை நாய்கள் கூட இவைகளைப் பின் தொடர அஞ்சும், ஒரு சமயத்தில் ஒரு பன்றி 13 நாய்களைத் தன் கோட்டால் குத்திக் காயப்படுத்தி விட்டதாம்.

வரையாடு :

வரையாடு அல்லது காட்டாடு (Ibex) இந்திய நாட்டுக் காடுகளில் மட்டும் காணப்படும் ஓர் இனமாகும். இமயமலையில் காணப்படும் தார் (Tarh) என்னும் ஆடு இவ்வினத்திலேயே மற்றொரு பிரிவைச் சேர்ந்ததாகும். சென்னை மாநிலத்திலுள்ள காடுகளுக்கே உரித்தான இவ் வரையாடு, அபிசீனியாவிலுள்ள உயர்ந்த மலைகளைத் தவிர உலகில் வேறு எங்கும் கிடையாது. முதன் முதலாக நீலகிரி மலைக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு இவ்வாடு ஒரு புதுமையாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் நாட்டில் இது போன்ற ஆடு கிடையாது. இவ்வாடு நீலகிரி மலையிலல்லாமல், மேற்குத் தொடர்ச்சி மலையின் வேறு பகுதி களான பழனி மலைக் காடுகளிலும், ஆனை மலைக் காடுகளிலும் நிறைய உள்ளன. ஏன்? குமரிமுனை வரையிலும் இவ்வினம் மலிந்து காணப்படுகிறது. நீலகிரிப் பீடபூமிகளில் இது சாதாரணமாகக் காணப்பட்டாலும், குந்தா மலைத்தொடரின் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மிகவும் செங்குத்தான சரிவுகளிலேயே