பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

என்னைக் கடைக்கண்ணால் கண்டான். “அன்பரே ! சிறிது நேரம் இந்த ஊசலை ஆட்டுவீரோ?” என்று அன்புடன் கேட்டேன். அவனும் அதை எதிர் நோக்கித்தான் காத்திருந்தான். “அன்பே ! உன் விருப்பம் போல் நான் ஊசலை ஆட்டுகிறேன்!” என்று தேனைச் சொல்லாக்கித் தித்திக்கக் கூறினான். தன் வலிய கைகளால் என் ஊசலைப்பற்றி ஆட்டினான். அவன் ஆட்ட நான் ஆடினேன். இடையில் கைநழுவி வீழ்பவளைப்போல் அவன் அன்புக் கரத்தில் வீழ்ந்தேன். உண்மையில் கைநழுவவில்லை. பொய்யாக நடித்தேன். ஆனால் அக்காளையோ, உண்மை என்று நம்பினான். என்னை விரைந்தெடுத்து மார்பில் அணைத்துக் கொண்டான். அவன் அகன்ற மார்பில் சிறிது நேரம் எல்லையற்ற இன்பங் கண்டேன். ஆனால் கண் விழிக்க விரும்பவில்லை. அக்காளையோ நல்லன். நற்பண்புகள் வாய்க்கப்பெற்றவன். கண்விழித்தால், நான் தன்னுணர்வு பெற்றுவிட்டதாக எண்ணி என்னை விடுத்து “இல்லத்துக்கு ஏகு என் கண்ணே!” என்று கனி மொழியால் கூறிவிடுவான். பின் அவன் மார்பில் துயிலும் இன்பம் எளிதில் கிட்டுமா? எனவே கண் திறக்காமல் அவன் கடிமார்பில் மாலையாய்க் கிடந்தேன்.” அப்பாடல் வருமாறு:

“.................................... ஏனல்
இனக்கிளி யாம்கடிந்து ஓம்பும் புனத்தயல்
ஊசல் ஊர்ந்தாட ஒருஞான்று வந்தானை
‘ஐய சிறிதென்னை ஊக்கி’ எனக்கூறத்
‘தையால் ! நன்று’ என்று அவன்ஊக்கக் கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில் : வாயாச் செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல் :
மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன் ; ஆயிடை
மெய்யறிந்து ஏற்றெழுவே னாயின் ஒய்யென
‘ஒண்குழாய் ! செல்க’ எனக்கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்.”