பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

நூலினால் கட்டிவிடுவார்கள். இறந்தவரின் உறவினர்கள், பிணத்திற்கு இறுதி வணக்கம் செலுத்துவர். மரத்தினால் பாடைசெய்து, அதைத் துணியால் அலங்கரிப்பர். அலங்கரித்த அப்பாடையை வீட்டின் முன்னால் வைப்பர். உறவினர் எல்லாரும் அழுவர். மற்றையோர் இசைக்கேற்ப ஆடுவர். ஓர் எருமையைப் பலியிட்டு, அதன் ஊனை எல்லாரும் பங்கிட்டுக் கொள்வார்கள். பிணத்தை அலங்கரித்து அதன் நெற்றியில் காசைப் பதிப்பார்கள், பிறகு இரும்பினால் செய்த சிறு கருவிகளையும், அரிசி, புகையிலை, அன்றாட உணவுப் பொருள் முதலியவற்றையும் பிணத்தோடு பாடையில் வைப்பார்கள். அழுகையும், ஆடலும், மதுவருந்தலும் பலமணி நேரம் நடைபெறும். கடைசியாகப் பாடையை இடுகாடு நோக்கி எடுத்துச் செல்லுவர், இறந்தவன் மனைவி, தன் நகைகளை இடுகாட்டில் களைந்து, இறுதி வணக்கம் செலுத்துவாள், பிணத்தைச் சிதையில் எடுத்துவைத்த பிறகு, பாடையை அழித்து விடுவர். பிணம் எரிந்த பிறகு, நீரூற்றிச் சிதையை நனைத்து, எலும்புகளையெல்லாம் பொறுக்கி ஒரு குழியில் புதைத்து மூடி, அதன்மேல் நடுகல் நாட்டுவர்.

தோடர்கள் எவ்வாறு காய்ந்த இறுதிச் சடங்கு செய்கிறர்களோ, அதே போல் திசம்பர் திங்களில் கோதர்களும் செய்கிறார்கள். இறந்து போனவரின் வீடுகளின் முன்னால், சடங்குகள் நடைபெறுவதற்கு எட்டு நாள் முன்பிருந்தே தினமும் ஆடல்பாடல் நடை பெறும். குறிப்பிட்ட நாளில் உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து, எருமையின் மண்டையோட்டைத் துணியில் ஒரு மூட்டையாகக் கட்டிப் பாடையின் மேல் வைத்து வணங்குவார்கள். அன்று பிணத்தோடு வைத்தவைகளைப் போன்றே, இன்றும் புகையிலை, அரிசி, உணவுப் பொருள் முதலியவற்றையும் பலகறைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடியையும் அம் மூட்டையோடு இடுகாட்டில் வைத்து எரிப்பார்கள். அப்பொருள்களெல்