பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

இரண்டுவிதத் திருமணங்கள் உண்டு. முதல்வகைத் திருமணத்தின்படி, பெண்ணானவள் கணவனிடம் தொடர்பு (marital relations} கொள்ளுவாள் ; ஆனால் கணவன் வீட்டுக்குச் சென்று வாழமாட்டாள். மற்றொரு வகைத் திருமணம் ‘மாலைக் கல்யாணம்' என்று சொல்லப்படுகிறது. அதன்படி மனைவி கணவனோடு வாழ அனுமதிக்கப்படுகிறாள். மருமக்கள் தாய முறையே இத் திருமண வேறுபாடுகளுக்குக் காரணம் என்று சொல்லலாம். இவர்கள் வய நாட்டுப் பீடபூமியில், இழிந்துவரும் நீரருவிகளின் நீரைப்பாய்ச்சி நெல் விளைவிக்கின்றனர். அதோடு புன்செய்த் தானியங்களையும் விளைவிக்கின்றனர். வய நாட்டுச் செட்டிகளின் சமுதாயத்தில் ஐந்து குடும்பங்கள் தலைமைபெற்ற குடும்பங்களாகக் கருதப்படுகின்றன. அக்குடும்பத்தாரின் ஆணைவழி எல்லாரும் ஒழுகுகின்றனர். இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் ; கட்டுப்பாட்டிற் கடங்கியவர்கள் ; அமைதியான வாழ்க்கையை உடையவர்கள் ; வேட்டையில் விருப்பமுடையவர்கள்; புலிகளை வலை போட்டுப் பிடித்து, ஈட்டியால் குத்திக் கொல்லும் வேட்டை முறையில் கைதேர்ந்தவர்கள். வயநாட்டுச் செட்டியரில் பலர் நிலக்கிழார்களாக இருந்தாலும், பெரும்பாலோர் ஏழைகள். சுல்தான் பேட்டரியிலிருக்கும் மாப்பிள்ளைகளிடம் எல்லாரும் கடன்பட்டு வாழ்கின்றனர். (மாப்பிள்ளைகளென்போர் மலையாளத்து முஸ்லீம்கள், அரேபியாவிலிருந்து மலையாளக்கடற்கரையில் குடியேறி அங்கேயே நிலைத்துவிட்டவர்கள். இவர்கள் சேர நாட்டுத் தமிழ்ப் பெண்களை மணந்து, நமக்கு மாப்பிள்ளைகளாகி விட்டனர் போலும். வய நாட்டில் பெரிய வட்டிக்கடைக்காரர்களாக இவர்கள் விளங்குகிறார்கள்). வய நாட்டுச் செட்டிகள் பெருங் குடியர்கள்.

பிற செய்திகள் :

நீலகிரியில் பனியர், இருளர் என்று வேறுசில பழங்குடியினரும் வாழ்கின்றனர். இவர்கள் எல்லாரும்