பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

பட்டவை, உதகமண்டலத்தை நீலகிரி மலையின்மீது தோற்றுவித்த திருவாளர் சல்லிவன் அவர்களுடைய சமாதியும், அவருடைய குடும்பத்தார் சமாதிகளும் இக் கோயிலிலேயே உள்ளன. இக்கோயிலின் மணிக் கூண்டு கி. பி. 1851-ஆம் ஆண்டிலும், ஆலயமணி கி. பி. 1894-ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டன, புனித தாமசு திருக்கோயில் கி. பி. 1867-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு கி. பி. 1870-ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இவ்விரு கோயில்களும் நகரத்தின் நடுவிலேயே அமைந்துள்ளன.

உதகமண்டலத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் உள்ள 'கண்டல்' என்ற இடத்தில் அமைந்துள்ள கத்தோலிக்கர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. உதகமண்டலத்திலிருந்து புறப்பட்டு, ஏரிக்கரை வழியாக வளைந்து செல்லும் மைசூர்ப்பாதையில் சென்றால், இடது புறத்தில் இயற்கையழகு கொழிக்கும் ஒரு மேட்டு நிலம் தென்படும். அதுவே கண்டல் திருக்கோயிலாகும். அக்கோயிலில் குறிப்பிடத்தக்க பெரிய கட்டடங்கள் எதுவுமில்லை. அம்மேட்டின் உச்சியில் ஏசு நாதரோடு கூடிய ஒரு சிலுவை நாட்டப்பட்டுள்ளது. இச்சிலுவை பாரிசிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபையாரின் ஆணையால் கி. பி. 1933-இல் இங்கு நாடடப்பட்டது. இது நாட்டப்பட்ட சில ஆண்டுகளில் இவ்விடத்தின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கிவிட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் இங்குப் புனித யாத்திரை செல்லுகின்றனர். சிலுவை நாட்டப்பட்டுள்ள மேடைக்குச் செல்லும் வழி, மிக்க அழகோடு அமைக்கப்பட்டுள்ளது. அவ் வழியில் இடையிடையே பல தங்குமிடங்கள் கண் கவரும் வனப்போடு அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில் அமைந்துள்ள இடம் கத்தோலிக்கக் கிருத்தவர்களைப் புதைப்பதற்காக அரசியலாரிடமிருந்து