பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

ஹாலி வால்மீன் (Halley's Comet) என்று கூறி விட்டு, 'ஜெருசலம்' என்ற தம் குதிரைமேல் தாவி ஏறி, வான ஆய்வுக்கூடத்திற்கு ஓடி, அதைப்பற்றி ஆராய்ந்தார். அதுபோன்ற வால்மீன் பல நூற்றாண்டு கட்கு ஒருமுறைதான் தென்படுமாம். கி. பி. 1910-ஆம் ஆண்டு, கோடைக்கானலில் வாழ்ந்த ஒருவர் தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், 'நான் கோக்கர் நடை வெளியில் அதிகாலை 4-40 மணிக்குச் சென்று கொண்டிருந்தபொழுது ஒரு வால்மீனை வானத்தில் கண்டேன். அதன் பேரழகு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அது போன்ற வால்மீனை நான் என்றும் கண்டதில்லை. அது அடிவானத்திலிருந்து நடுவானம் வரை நீண்டு பேரொளியோடு விளங்கியது' என்று குறிப்பிட்டார்.

திருவாளர் எவர் செட் ஒய்வ பெற்றகம். டாக்டர் டி. ராய்ட்ஸ் என்பவர் பொறுப்பேற்றார். 1936-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் நாள் ஏற்பட்ட 'பூரண சூரிய கிரகணத்தை ' (total eclipse of the sun)ப் பற்றி ஆராய்வதற்காக அவரும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார்.

கோடைக்கானலிலுள்ள இவ்வானாய்வுக் கூடம், 'இந்திய அரசியலாரின் வானக்கலை ஆய்வுக்கூடம்' (The Government of India Solar Physics Observatory) என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. இக் கூடம் சூரியனைப்பற்றி ஆராய்ந்தும், சுண்ண ஒளி (Calcium light) யையும், நீர்வாயு ஒளி (Hydrogen light) யையும் படம் பிடித்தும், பல உண்மைகளை வெளியிட்டு வானக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டு வருகிறது. மேலும் புவிக்கவர்ச்சி (Terrestrial magnetism) யைப் பற்றியும், அனிலோற்பன்னக் கலை (Meteorology) யைப் பற்றியும், பூகம்பவியல் (Seismo-