பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

279

அவைகளின் விலையைவிடக் கப்பற்கூலி மிகவும் அதிகமாக இருந்தது. இங்கு விளைந்த காஃபியும் உயர்ந்த ரகத்தைச் சார்ந்ததல்ல. ஜாவாவில் விளைந்த காஃபியோடு இதனால் போட்டியிட முடியவில்லை. காஃபியைப் பயிரிடுவதற்கு ஏற்பட்ட செலவு, மிகவும் அதிகமாக இருந்தது. குற்றாலத்திலிருந்த காஃபித் தோட்டங்களைத் திருவாங்கூரில் வாழ்ந்த ஓர் ஐரோப்பியத் தோட்ட முதலாளி, ஆண்டுக்கு ரூ. 200 வீதம் 1835- ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். ஆகையினால் பெருஞ்செலவில் அரசியலார் நடத்திவந்த காஃபிப் பயிர்த்தொழிற் சோதனை கைவிடப்பட்டது. திருநெல்வேலித் தண்டலராக இருந்த திருவாளர் ஈ. பி. தாமஸ் தோட்ட வேலையில் மிகவும் ஆர்வமுள்ளவர். கி.பி. 1843-ஆம் ஆண்டு குற்றாலத்தில் மீண்டும் பயிர்த் தொழிலை முழுமுயற்சியோடு தொடங்கினார். சாதிக்காய்ச் செடிகளை இங்கு நட்டதோடு, அவ்விதைகளைத் திருவாங்கூர், சேலம் மாவட்டங்களுக்கும் வழங்கினார். திருவாங்கூர் மலைகளிலும், சேர்வராயன் மலைகளிலும் அவை நடப்பட்டன. தாமஸ் தாம் பயிரிட்ட சாதிக் காய்ச் செடிகளுக்கு நல்ல உரமிட்டார்; களை எடுத்தார்; கிளைகளை வெட்டி விட்டார்; நல்ல முறையில் அவைகளைக் கண்காணித்தார், அவருடைய பேருழைப்பால், கி. பி. 1840 முதல் 1850-ஆம் ஆண்டிற்குள் சாதிக் காய் மரங்கள் நிறைய வளர்ந்தன. அப்பொழுது அத் தோட்டங்கள் 40 முதல் 50 ஏக்கர் வரை பரப்புடையனவாக இருந்தன. அத்தோட்டத்தில் சாதிக்காய் இலவங்கம், காஃபி, சிறிதளவு தேயிலை, சாக்லேட் மரம், மங்குஸ்டீன் முதலியவை நல்லமுறையில் விளைந்தன. கி. பி. 1848-ஆம் ஆண்டு தாமஸ் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அரசியலார் தோட்டங்களை விற்றுவிட எண்ணினர். ஆண்டுதோறும் அத்தோட்டத் தொழிலுக்காக ரூ. 3000 அரசியலரால்